என் மலர்
ஈரோடு
- அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி.
- சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் அபினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இதில் அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் விளையாட சென்று விட்டான். இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர்.
அப்போது அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே விளையாடி கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு சென்று தேடி பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் அபினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்த வர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. சிறுவனின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது.
மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவை பார்த்த பொழுது சிறுவன் மாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி விளையாடிக் கொண்டிருப்பதும், இறுதியாக 7அடி ஆழமுள்ள குழி அருகே அமர்ந்து கொண்டிருப்பதும், அதில் தவறி விழுந்ததும் பதிவாகி இருந்தது.
அந்த குழியில் 4 அடி ஆழம் தண்ணீர் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்ததும் தெரிய வந்தது.
சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கள்ளியங்காடு வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் சூதாடி கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55), வாணிப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), சந்திரன் (38), டி.என்.பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (53), ராஜன் (39), ஆறுமுகம் (56) என தெரிய வந்தது.
அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்ரமசிங்கபுரம் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் பரசுராமன் (30). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 5 ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.
பரசுராமன் தனது நண்பர்களான சாவடிப்பாளையம் புதூரைச் சேர்ந்த மதன், பிரபு, முரளி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் மதியம் சாமி கும்பிட்டு விட்டு காவிரி ஆற்றில் குளித்தனர்.
அப்போது பரசுராமன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீர் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு அப்பகுதியில் பரசுராமனை தேடிப் பார்த்தனர். ஆனால் அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பரசுராமனின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
- நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.
- இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் லட்சுமிபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் சகிலாமணி (56), இவரது கணவர் அழகிரிசாமி, இவர்களுக்கு திருமணமாகி கோவிந்தராஜ் (33) என்ற மகன் உள்ளார்.
சகிலாமணியின் கணவர் கடந்த 6- வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார், இந்நிலையில் நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து பார்க்கையில் பாம்பு கடித்து விட்டதாக அறிந்து கொண்டு, பாம்பை அடித்து கொன்ற உறவினர்கள், சகிலாமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்திருந்த சகிலாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
- கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் ராமர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பதும் சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து 13.02 கிலோ குட்கா மற்றும் மொபட்டையும் பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து செல்வம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கர்நாடகாவில் வாங்கி வந்து உள்ளூர் பகுதியில் மளிகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்
- இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–ட்டன.
- இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவ–மனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ–மனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளி–கள் உள்பட 1,597 மையங்க–ளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–ட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. மாவட்டத்தில்
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 675 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 244 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 19 ஆயிரத்து 805 பேரும் என மொத்தம் 24,724 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த முறை நடந்த முகாமை காட்டிலும் நேற்று நடந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் இறுதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவ–மனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
- கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை கோபி, அந்தியூர் மற்றும் பவானி,சத்தி,பாசன பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், அதிகளவில் முதல் போக நெல் சாகுபடி செய்திருந்தனர்.
ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45,சம்பா,பொன்னி உள்ளிட்ட ரகங்கள் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.
தற்சமயம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பங்களாபுதூர், டி.என் .பாளையம்,பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாகுறை காரணமாக எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தற்போது நெல் அறுவுடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..
விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும்நெல்லை கொள்முதல் செய்வ–தற்காக, கோபியில், கூகலூர், நஞ்சகவுண்டன் பாளையம், புதுவள்ளியாம் பாளையம், புதுக்கரைபுதூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க–பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர்,
மேலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்திருப்பதால் தஞ்சை, திருவாருர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கபட்டு அறுவடை பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது..
மேலும் உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத நிலை உருவாகும்.
இதனை தவிர்க்க உடனே உரங்களின் விலையை குறைத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லிற்கு கூடுதல் விலை கொடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது. இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசுவதும், எதிராக பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வியாபாரிகள், வாகன டிரைவர், பொது நல அமைப்புகள், கூலித் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்து வருகிறார்.
- தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.
ஈரோடு:
முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு பின்பு நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் அவர் இருந்து வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரை எதிர்த்து பா.ஜ.க.வை சேர்ந்த சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 ஓட்டு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை.
மேலும் தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் சுப்புலட்சுமி ஜெகதீசனும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமீபகாலமாக கட்சி தலைமைக்கு எதிராக அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
கடந்த 15-ந்தேதி விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்காமல் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் ஆகியோர் புறக்கணித்தனர்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உறுதி செய்ய முயன்றபோது சுப்புலட்சுமி ஜெகதீசனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் இன்று காலை முதல் பத்திரிகையாளர்களின் முயற்சிக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அவரது ஆதரவாளர்கள் மட்டும் சந்தித்து பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரம் பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது.
சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
- திருமணமான 100 நாட்களில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்ய காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- சிலிண்டரை இந்துவின் தந்தை திருவேங்கடசாமி டெலிவரி எடுத்துள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்து (25). இவருக்கும் நல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுசாரதிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன்-மனைவி 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்துவின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை சந்திக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து தனது கணவர் விஷ்ணுசாரதியுடன் பொலவகாளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்ற இந்து இரவு 7.30 மணி ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. உறவினர்கள் அவரை எழுப்பியபோது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி டேப் ஒட்டப்பட்டு பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் வாயில் காற்றை செலுத்தி மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. சியாமளாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்து தற்கொலை குறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் விசாரணை நடத்தினார்.
திருமணமான 100 நாட்களில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்ய காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டர் குறித்தும் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்து சென்னையில் இருக்கும்போதே தற்கொலை செய்ய திட்டமிட்டு பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரை ஆன்லைன் மூலம் வாங்கி பொலவகாளிபாளையத் தில் உள்ள தனது தந்தை வீட்டு முகவரிக்கு அனுப்பி உள்ளார்.
சிலிண்டரை இந்துவின் தந்தை திருவேங்கடசாமி டெலிவரி எடுத்துள்ளார். ஹீலியம் சிலிண்டரை பெற்றுக்கொண்ட அவர் தனது மகளிடம் தொடர்பு கொண்டு இந்த சிலிண்டர் எதற்கு என்று கேட்டுள்ளார். அதற்கு இந்து பலூன் அடிக்க தேவைப்படுகிறது என்று பதில் அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குணா மனைவி நந்தினி, அதே முகவரியை சேர்ந்த ஆனந்தன் மகள் நிரஞ்சனா ஆகியோர் என்பது தெரியவந்தது.
- இருவரும் சகோதரிகள். மதுவுக்கு எதிராக நந்தினி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலைய பகுதியில் 2 இளம்பெண்கள் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை அச்சிட்ட நோட்டீஸ்களை விநியோகம் செய்து கொண்டு இருந்தனர்.
இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார், விரைந்து வந்து நோட்டீஸ் விநியோகம் செய்து வந்த 2 இளம்பெண்களை பிடித்து, அவர்களிடம் இருந்த நோட்டீசை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், மத்திய, மாநில அரசுகளுக்கும், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து, அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.
பின்னர், அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால், இருவரையும் மகளிர் போலீஸ் மூலம் குண்டு கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் மதுரை மாவட்டம் கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குணா மனைவி நந்தினி (29), அதே முகவரியை சேர்ந்த ஆனந்தன் மகள் நிரஞ்சனா (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் சகோதரிகள். மதுவுக்கு எதிராக நந்தினி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டவுன் போலீசார் 151 பிரிவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்தினி மற்றும் நிரஞ்சனாவை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இதனால் ஈரோடு பஸ் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சசிகுமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதாக கூறப்படுகிறது.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை மீண்டும் சசிக்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
அந்தியூர் அடுத்த பர்கூர் ஊசிமலையை சேர்ந்தவர் சசிகுமார் (23). இவர் தற்போது முனியப்பன் பாளையத்தில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஊசிமலை பகுதியை சேர்ந்த கவின்குமார் (17) என்ற தனது நண்பருடன் பவானி ஆற்றில் அத்தாணி-சவுண்டபூர் பாலம் அடியில் இறங்கி குளிக்க சென்றனர்.
அப்போது சசிகுமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கவின்குமார் சசிகுமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆப்பக்கூடல் போலீசாரு க்கும் தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் 3 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சசிகுமாரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை மீண்டும் சசிக்குமாரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.






