என் மலர்
ஈரோடு
- பட்லூர் நால்ரோடு பகுதியில் மளிகை கடை மற்றும் துணிக்கடைகளில் வெள்ளித்திருப்பூர் போலீசார் சோதனை செய்து ஆய்வு செய்தனர்.
- ஒரு மளிகை கடை மற்றும் துணிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஹான்ஸ் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் மற்றும் பட்லூர் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளித்திருப்பூர் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர். அதே போல் பட்லூர் நால்ரோடு பகுதியில் மளிகை கடை மற்றும் துணிக்கடைகளில் சோதனை செய்து ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் துணிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஹான்ஸ் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் பரிந்துரையின் அடிப்படையில் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த ஜவுளி கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை தெடர்ந்து கடையின் சாவியை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
- பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று நீலகிரி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர்கள் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு போட்டியாக கடைகளை வழக்கம்போல் திறந்து கொள்ளலாம் என்று தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
இருப்பினும் நேற்று இந்த பகுதிகளில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கோவை-சத்தியமங்கலம் சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
- ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.
- மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.
இந்த சந்தைக்கு தமிழ்நா ட்டின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும், கேரளா கர்நாடகா, ஆந்திரா, மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்கின்றனர்.
மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக விசேஷ நாட்கள் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் கோவில்களில் அடுத்தடுத்து விசேஷங்கள் வருகின்றன.இதேபோல் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது.
இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பாவாடை, நைட்டி, சர்ட், வேட்டி சட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சில்லறை வியாபாரம் சற்று மந்தமாக நடந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் இருந்து தீபாவளி விற்பனை களை கட்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர்கள் ஹரிதாஸ், ஆறுமுகம், பிரசன்னா, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1.1.2022 முதல் 30.6.2022 முடிய வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ. 497 ஆக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ெரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுக்குவாரி பாளையம் பகுதியில் கொண்ண மரத்தையன் கோவில் உள்ளது. இத கோவில் பூசாரி தங்கவேல் தினமும் காலை கோவிலுக்கு வந்து பூைஜ செய்து விட்டு இரவில் பூட்டி விட்டு செல்வது வழக்கம்.
இந்த கோவிலுக்கு தின மும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணி க்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் கோவில் பூசாரி தங்கவேல் நேற்று முன்தினம் பூைஜ செய்வ தற்காக வழக்கம் போல் கோவிலை திறந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பூசாரி கோவில் தர்மகர்த்த தன வேலுக்கு தகவல் கொடுத் தார். அவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கோவில் தர்மகர்த்த தனவேல் சிறு வலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய்.
- இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய். இதை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை .
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அங்கு மரத்தில் தொங்க விட்டுள்ளனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
சென்னிமலை டவுன் அருகே உள்ள வனப்ப குதியில் மலைக்கணுவாய் அருகில் உள்ள மரத்தில் முதியவரின் உடல் தொங்கியது சுற்று வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.
- இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.
பெருந்துறை:
பெருந்துறை பவானி ரோடு பூவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவி ந்தம்மாள். கணவனை இழந்த இவர் பெருந்துறை பகுதியில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தாமரைக்க ண்ணன் (வயது 16), கமலேஷ் (வயது 14) என்று 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகி ன்றனர்.
இதில் தாமரைக் கண்ணன் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர். இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தாமரைக்கண்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளோடு அருகே உள்ள கே.கே.வலசு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லில் தாமரைக்கண்ணன் உடல் பிணமாக மிதந்து வந்துள்ளது தெரிய வந்தது.
பெருந்துறை போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தாமரைக்கண்ணன் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
- அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மக்களுக்கு நிரந்தரமாக சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.412.12 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டத்தி ற்கான பணிகள் தொடங்க ப்பட்டது.
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சைக்காளமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மன்ன தாம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றின் நடுவில் கிணறு அமைக்க ப்படுகிறது. அதில் இருந்து குழாய் மூலம் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் கூடுதலாக கிணறு அமைக்க ப்படுகிறது.
அங்கிருந்து புஞ்சைக் காளமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட கணபதி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கு நீரை சுத்திகரிப்பு செய்ய ப்படுகிறது.
இதன் மூலம் மொடக் குறிச்சி, எழுமாத்தூர், பள்ளியூத்து, கஸ்பாபேட்டை ஆகிய 4 இடங்களில் நீர் உந்து நிலையங்களில் கொண்டு சென்று பின்னர் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் புதிதாக 25 தரை மட்ட நீர் தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட உள்ளது.
மேலும் 25 தரை மட்ட நிர் தேக்க தொட்டிகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 554 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 225 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீ ரைக் கொண்டு சென்று அதன்மூலம் வீட்டு இணைப்பு களுக்கு நேரடி யாக குடிநீர் வழங்க உள்ளனர்.
இதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெரும் வகையில் 20.50 மில்லியன் லிட்டர் எடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 23 ஊராட்சிகளைச் சேர்ந்த 442 குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க ப்பட உள்ளது.
இத்திட்டம் பாசூர் பேரேஜ்க்கு அருகே உள்ள மன்னதாம்பாளையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.
இதனால் கோடை காலங்களில் பேரேஜில் தண்ணீர் தேக்கும் போது இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதிலிருந்து காவிரி ஆற்றின் கரைப்பகுதியான மன்னதாம்பாளையத்தில் கூடுதலான கிணற்றுக்கும் பெரிய குழாய் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளது.
அதேபோல் கணபதி பாளையத்தில் அமைக்க ப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையம் பணியும், 4 நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, புதிதாக ஊராட்சி களில் கட்டப்பட்டு வரும் 225 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொய்வ டைந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது
- சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது.
ஈரோடு, செப். 20-
கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:
அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது. காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தி, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்து, சாம்பல் சத்தை கரைத்து, நுண்ணூட்ட சத்துக்களை உறிஞ்சி கொடுக்கும் திறன் மிக்க பாக்டீரியாக்கள் மூலம் உயிர் உரம் தயாரிக்கப் படுகிறது.
தழைச்சத்திற்கு அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிர் உரங்களையும் மணிச்சத்திற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் பயன் படுத்தலாம். மேலும் பொட்டாஷ் மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கக் கூடியது.
சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது. அத்தகைய மண்ணில் கரையாத நிலை யில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிர்கள் எடுத்து கொள்ளும் வகையில் அளிக்க வல்லது இந்த பாக்டீரியா மேலும் வறண்ட சூழ்நிலையில் பயிர்கள் வெப்பத்தை தாங்கி வளர வழி வகுக்கிறது.
சரியான ஒளிச் சேர்க்கைக்கும் உதவுகிறது. மணிகளின் எடையை அதிகரித்து மகசூலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
திரவ உயிர் உரங்களைக் கொண்டு நெல் விதை நேர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மில்லி லிட்டர் கலந்து பின் தெளிக்கலாம்.
ஒரு ஏக்கர் நாற்றுகளுக்கு 100 மில்லி லிட்டர, திரவ உயிர் உரத்தை தேவையான அளவு தண்ணீரில் கலந்து நாற்றின் வோப் பகுதி நன்கு நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்தை தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து 15, 30 மற்றும் 45-வது நாட்களில் பயிர்களில் படும்படி தெளிக்கலாம். உழவர்கள் திரவ உயிர் உரங்களை பயன் படுத்துவதன் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
- தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.
ஈரோடு:
தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் இளைஞர்களுக்கு வழி விடுவதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஏராளமான தி.மு.க.வினர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அவர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சித்தலைமை மூலம் ஷீட் வாங்க கடுமையாக போராடினர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக சுப்புஜெகதீசன் அறிவிக்கப்பட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகிகளையும் சந்திக்காமல் இந்தார். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஷீட் கொடுத்ததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்தலின் போது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 2 ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. இதே போல் கட்சி நிர்வாகிகளும் தங்களை அரவணைத்து தேர்தல் பணியாற்றவில்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் மீதும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜனதா வேட்பாளர் சரஸ்வதியிடம் 206 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்காததால் தோல்வியை தழுவியதாக மீண்டும் புகார் தெரிவித்தார்.
இது குறித்து 2 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒரு முக்கிய நிர்வாகி மீது கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தார். கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் தனக்கு கட்சியில் எந்த அங்கீகாரமும் இல்லை என்று முடிவு செய்து தலைமைக்கு ராஜினமா கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளம் மூலம் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சுப்புலட்சுமி விவகாரத்தில் என்ன நடந்தது என்று அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.
தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பு போன்றவற்றில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் ஓட்டு எண்ணிக்கையில் சுப்புலட்சுமி ஜெகதீசனே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் தபால் ஓட்டில் தி.மு.க.வுக்கு விழுந்த ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் குறைந்த ஓட்டில் சுப்புலட்சுமி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அப்போது தி.மு.க.வுக்கு விழுந்த தபால் ஓட்டுகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததற்கு சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஆதரவாக நிர்வாகிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. அப்போதே அவர் மனம் உடைந்து விட்டார். தேர்தல் தோல்விக்கு பின்பும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு கட்சி நிகழ்ச்சிகளுக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசனை அழைப்பதில்லை. தொடர்ந்து அவரை புறக்கணித்து வந்தனர். ஆனாலும் கடந்த மாதம் முதல்-அமைச்சர் கலந்து கொண்ட 2 நிகழ்ச்சிகளிலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார்.
தன் தேர்தல் தோல்விக்கு காரணமான 2 ஒன்றியச் செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாலும், தனது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார். மாநில நிர்வாகியான சுப்புலட்சுமி ஜெகதீசனை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளர்களாக இருந்த நிர்வாகி கூறியதாவது:-
சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளராக இருந்து வந்த நான் அவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு பணியாற்றினேன். இந்த நிலையில் கட்சி தலைமை மீது அவரது கணவர் ஜெகதீசன் முகநூலில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தார்.
கட்சி பொறுப்பில் இருந்து கொண்டு கட்சியை விமர்சிக்கும் அவரது கணவருக்கு சுப்புலட்சுமி எதிர்பு தெரிவிக்கவில்லை. இதனால் நான் உள்பட ஏராளமான ஆதரவாளர்கள் சுப்புலட்சுமியிடம் இருந்து விலகி வந்து விட்டோம். பேசி தீர்க்க வேண்டிய உட்கட்சி பிரச்சனையை தேர்தல் தோல்வியை மையமாக வைத்து அவரது கணவர் முகநூலில் விமர்சித்ததால் அவரது ஆதரவாளர்களே எதிர்பாளர்களாக மாறி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆ. ராசாவின் பேச்சை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
- சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு, வடக்குப்பேட்டை, பஸ் நிலையம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சத்தியமங்கலம:
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆ. ராசாவின் பேச்சை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க.வினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் வழக்கு போல் கடைகள் திறக்கப்படும் என தி.மு.க. சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்பாக 2 தரப்பினரும் மாறி மாறி நோட்டீஸ் வழங்கினர். இதனால் கடைகள் திறக்கப்படுமா? என குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று சத்தியமங்கலம், பவானி சாகர், பு.புளியம்பட்டி பகுதிகளில் பெரும்பான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக டீக்கடைகள், பேக்கரி கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன.
சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் பஸ் நிலையப் பகுதிகளில் இன்று காலை கடைகள் திறக்கப்பட்டதும் இந்து முன்னணி நிர்வாகிகள் கடைகளை அடக்க சொல்லி வற்புறுத்தினர்.
இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீராம்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை டீக்கடை திறக்கப்பட்டதும் இந்து முன்னணி நிர்வாகிகள் வந்து கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தினர்.
இதில் சிலர் டீக்கடை கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சத்தியமங்கலத்தில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய இந்து முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதேப்போல் சத்தியமங்கலம் நகர தி.மு.க. சேர்மன் ஜானகி ராமசாமியிடம் இந்து முன்னணியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்திய மங்கலத்தில் முக்கியமான பகுதிகள் கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு, வடக்குப்பேட்டை, பஸ் நிலையம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேப்போல் பவானிசாகர் பகுதிகளிலும் 50 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள், பேக்கரி கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன. இருந்தாலும் மக்கள் அச்சம் காரணமாக கடைகளில் வரவில்லை. கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் பு.புளியம்பட்டியில் இன்று 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போலீஸ் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புளியம்பட்டியில் இன்று காலை ஒரு டீக்கடை திறந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் கடையை அடைக்க வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தினர்.
அதே நேரத்தில் தி.மு.க.வினர் கடையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து புளியம்பட்டி போலீசார் அப்பகுதிக்கு வந்து இருதரப்பு இடையே சமாதானம் செய்து வைத்தனர்.
இந்து முன்னணி நிர்வாகிகள், பி.ஜே.பி.யை சேர்ந்தவர்கள் என 8 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது.
- நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன்.
ஈரோடு:
தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
அதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன்.
நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






