என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெள்ளித்திருப்பூர் அருகே ஹான்ஸ் விற்பனை செய்த ஜவுளி கடைக்கு சீல்
- பட்லூர் நால்ரோடு பகுதியில் மளிகை கடை மற்றும் துணிக்கடைகளில் வெள்ளித்திருப்பூர் போலீசார் சோதனை செய்து ஆய்வு செய்தனர்.
- ஒரு மளிகை கடை மற்றும் துணிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஹான்ஸ் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் மற்றும் பட்லூர் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளித்திருப்பூர் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர். அதே போல் பட்லூர் நால்ரோடு பகுதியில் மளிகை கடை மற்றும் துணிக்கடைகளில் சோதனை செய்து ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் துணிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஹான்ஸ் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் பரிந்துரையின் அடிப்படையில் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த ஜவுளி கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை தெடர்ந்து கடையின் சாவியை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.






