கோவில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை

உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை
Published on

கோபி:

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுக்குவாரி பாளையம் பகுதியில் கொண்ண மரத்தையன் கோவில் உள்ளது. இத கோவில் பூசாரி தங்கவேல் தினமும் காலை கோவிலுக்கு வந்து பூைஜ செய்து விட்டு இரவில் பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

இந்த கோவிலுக்கு தின மும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணி க்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் கோவில் பூசாரி தங்கவேல் நேற்று முன்தினம் பூைஜ செய்வ தற்காக வழக்கம் போல் கோவிலை திறந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பூசாரி கோவில் தர்மகர்த்த தன வேலுக்கு தகவல் கொடுத் தார். அவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கோவில் தர்மகர்த்த தனவேல் சிறு வலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com