மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

டி.என்.பாளையம் 

டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் லட்சுமிபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் சகிலாமணி (56), இவரது கணவர் அழகிரிசாமி, இவர்களுக்கு திருமணமாகி கோவிந்தராஜ் (33) என்ற மகன் உள்ளார்.

சகிலாமணியின் கணவர் கடந்த 6- வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார், இந்நிலையில் நேற்று சகிலாமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு 2- மணியளவில் ஏதோ பூச்சி கடித்து விட்டதாக சத்தமிட்டு உள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து பார்க்கையில் பாம்பு கடித்து விட்டதாக அறிந்து கொண்டு, பாம்பை அடித்து கொன்ற உறவினர்கள், சகிலாமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்திருந்த சகிலாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com