search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு"

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். தொழிலாளி. இவரது மனைவி சரிதா (31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் குன்றி கடம்பூர் பாதையில் அஞ்சனை பிரிவு அருகே வந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், தாயும்-சேயும் கடம்பூர் அரசு ஆரம்ப நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்.

    • சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் ஒரு பெண்ணுக்கு கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
    • இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் உமா மகேஸ்வரி என்பவர், சேம்பூர் கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ், மனைவி பரிமளா (வயது 38) என்பவருக்கு, கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதில் பரிமளா உடல் நலம் மோசமடைந்தால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவலறிந்த சேலம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர், நேற்று கருமந்துறைக்கு சென்று, அந்த தனியார் மருந்தகத்தை ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காக முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச்செழியன், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தார். இதுகுறித்து மருத்துவத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் 100 முறை மொபட்டை ஓட்டிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
    • பெண் ஒருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ெஹல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தில் 12 தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ெஹல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிவேகமாக செல்பவர்களின் வாகன எண்ணை தானியங்கி காமிரா பதிவு செய்து, விதியை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏறும் இடம், இறங்கும் இடம் ஆகிய பகுதிகளில் தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    நெரிசல் குறைவாக இருப்பதால் மேம்பாலத்தில் இளம்பெண்களும், வாலிபர்களும் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. தானியங்கி காமிரா மூலம் 119 முறை விதிமுறையை மீறி மோட்டார்சைக்கிள் ஓட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெண் ஒருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ெஹல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அவர் அந்த அபராத தொகையை அரசுக்கு செலுத்தவில்லை.

    தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மொபட் ஓட்டி வரும் அவரை, பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டதில் சதம் அடித்த அந்த பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யவும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×