கருமந்துறையில் பெண்ணுக்கு கருச்சிதைவு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் ஒரு பெண்ணுக்கு கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.
கருமந்துறையில் தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள்சீல் வைத்த  காட்சி.
கருமந்துறையில் தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள்சீல் வைத்த காட்சி.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் உமா மகேஸ்வரி என்பவர், சேம்பூர் கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ், மனைவி பரிமளா (வயது 38) என்பவருக்கு, கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதில் பரிமளா உடல் நலம் மோசமடைந்தால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர், நேற்று கருமந்துறைக்கு சென்று, அந்த தனியார் மருந்தகத்தை ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காக முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புச்செழியன், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தார். இதுகுறித்து மருத்துவத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com