என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஹெல்மெட் அணியாமல் மொபட்டை ஓட்டிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
- சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் 100 முறை மொபட்டை ஓட்டிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
- பெண் ஒருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ெஹல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தில் 12 தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ெஹல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிவேகமாக செல்பவர்களின் வாகன எண்ணை தானியங்கி காமிரா பதிவு செய்து, விதியை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏறும் இடம், இறங்கும் இடம் ஆகிய பகுதிகளில் தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
நெரிசல் குறைவாக இருப்பதால் மேம்பாலத்தில் இளம்பெண்களும், வாலிபர்களும் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. தானியங்கி காமிரா மூலம் 119 முறை விதிமுறையை மீறி மோட்டார்சைக்கிள் ஓட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண் ஒருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ெஹல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அவர் அந்த அபராத தொகையை அரசுக்கு செலுத்தவில்லை.
தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மொபட் ஓட்டி வரும் அவரை, பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டதில் சதம் அடித்த அந்த பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யவும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.