இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த பறைக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. அவரது மனைவி உமாமகேஸ்வரி (36). இவர்களுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகிறது. இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை. உமா மகேஸ்வரி இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி மலையம்பாளையம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பம் இல்லை என முடிவு வந்தது. இதனால் உமா மகேஸ்வரி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வரப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாமகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com