பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மரப்பாலம், பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியது.

விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி (54), சாகுல் ஹமீது (54), ஆனந்தகுமார் (62), மற்ெறாரு சாகுல் ஹமீது (45), பாபு (59), மாரியப்பன் (42), மைதீன் (44), முஸ்தபா (45) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டும், ரூ. 4,200 பணமும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com