

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த தாமரை பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சரவணகுமார் (45). லாரி டிரைவர்.
சம்பவத்தன்று சரவண குமார் சோளம் லோடு ஏற்றிக்கொண்டு லாரியை புதிய கூட்செட்டில் இருந்து பில் வாங்குவதற்காக சென்னிமலை ரோட்டில் உள்ள பழைய கூட் செட்டுக்கு லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது நுழை வாயிலில் இருந்த மரக்கிளை லாரியின் கேப்பின் மீது மோதி விட்டது. அதை சரி செய்ய சரவணகுமார் கேப்பின் மீது ஏறி மரக்கிளையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சரவணகுமார் கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சரவணகுமார் இறந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.