என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பாதையை யார் பயன்படுத்துவது என்பதில் பழனிச்சாமி-பிரகாஷ் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கணபதி பாளையம் அருகே உள்ள சாக்கவுண்டம்பாளையம் பகுதி சேர்ந்தவர் பழனிச்சாமி (63). மனைவி கல்யாணி (53). மகன் தரணிதரன் (30) ஆகியோருடன் வசித்து வருகிறார். பழனிச்சாமியின் சித்தப்பா மகன் பிரகாஷ் (45). இவரும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் பழனிச்சாமிக்கு அந்த ஊரில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு அருகில் பிரகாஷின் நிலம் உள்ளது. இந்த 2 நிலங்களுக்கும் மத்தியில் பொதுவாக பொதுவழி பாதை உள்ளது. இந்த பாதையை 2 பேரும் பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை யார் பயன்படுத்துவது என்பதில் பழனிச்சாமி-பிரகாஷ் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷின் நண்பர் தட்சிணாமூர்த்தி என்பவரின் வீடு கட்ட லாரியில் மணல் ஏற்றி கொண்டு பொதுவழி பாதையில் கொண்டு சென்ற போது பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் லாரியை தடுத்து நிறுத்தி இந்த வழியாக செல்லக்கூடாது என்று கூறினார். இதனால் இரு தரப்பினர் கிடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவர் ஒருவர் உருட்டு கட்டை மற்றும் அருவாளால் வெட்ட தொடங்கினர்.

    இதில் பிரகாஷ் அருவாளால் வெட்டியதில் பழனிச்சாமிக்கு நடு தலையில் வெட்டு விழுந்தது. இதேப்போல் கல்யாணிக்கு இடது முழங்கைக்கு கீழ் பலத்த வெட்டு விழுந்தது. தரணிதரனுக்கு தலை மற்றும் இரண்டு கைகளில் வெட்டு விழுந்தது. இதேபோல் பிரகாசுக்கு சிறிது காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இது குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெட்டுப்பட்ட பழனிச்சாமி, அவரது மனைவி கல்யாணி, மகன் தரணிதரன் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரகாசை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 14-ந் தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.
    • விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடம் என மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த 14-ந் தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் புதிய உச்சத்தை தொட்டது.

    இதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு மகாராஷ்டிர, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் ஈரோடு மஞ்சளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மஞ்சுளோடு ஈரோடு மஞ்சள் தரத்தில் அதிக அளவில் உள்ளதால் கடந்த சில நாட்களாகவே ஈரோடு மஞ்சளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மஞ்சளை வெளி மாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் நிலத்தில் 2,049 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569-க்கு விற்பனையானது.

    அதாவது ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.4,399 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
    • ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கருவல்வாடிபுதூர் குளத்தில் இருந்து வெளியேறும் அரசுக்கு சொந்தமான உபரி நீர் வழிப்பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தியூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வருவாய் துறையை கண்டித்து அத்தாணி பேரூராட்சி 15-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வேலு மருதமுத்து தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

    • அந்தியூரில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    அந்தியூர்,

    அந்தியூர் அருகே சண்டி ப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயான த்தில் 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போ ட்டுக் கொண்டிருந்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் பிடி பட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழை த்து சென்றனர். விசாரணை யில் அவர்கள் அதே பகுதி யைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெ ங்கடேசன், சவுந்தர் ஆகியோ ர் என தெரியவந்தது.

    இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பி லான போதை ஊசி, மாத்தி ரையை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பாலாஜி, திருமூர்த்தி ஆகி யோரை பிடிக்க இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறை வாக இருக்கும் 2 பேரை பிடித்தால் தான் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரி யவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்து ள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    • மடிக்கணினி, செல்போன் திருடியவர்கள் கைது செய்யபட்டனர்
    • போலீசார் ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த னர்.

    ஈரோடு:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அமல்தேவி (வயது 36). இவர் கடந்த 16-ந் தேதி கொச்சுவேலி-மைசூர் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து ள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பேக்கை காண வில்லை. அதில் ரூ.1 லட்ச த்து 13 ஆயிரம் மதிப்புள்ள 2 மடிக்கணினிகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்து ள்ளது. பின்னர் இதுகுறித்து அமல்தேவி ஈரோடு ரெயில்வே காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குபதிவு செய்து பேக்கை திருடிய மர்ம நப ர்களை தேடி வந்தார்.

    இந்நிலையில் போலீசார் ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த னர். விசாரணையில் பேக்கை திருடியது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஆரோ க்கிய ஜேசுராஜ் (33) மற்றும் திருப்பூர் வி.ஓ.சி நகரை சேர்ந்த பாண்டியராஜன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் திருடிய மடி க்கணினி மற்றும் செல்போ ன்களை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 27 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கபட்டது
    • சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு உதவியாளர்களாக பணியாற்றி வந்த 27 பேர் கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 17-ந் தேதி வரை கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த 27 பேருக்கும் சப்- இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்து மாவட்ட த்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவின்படி பிரபாகரன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், வடிவேல் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், ஆனந்தகுமார், எட்வின் டேவிட், ரவிக்குமார் ஆகியோர் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், செல்வம் புளியம்ப ட்டிக்கும், வில்சன் சத்யராஜ், சரவணகுமார், ஜெக தீஸ்வரன் கோபிசெட்டி பாளை யத்துக்கும், செல்வ ராஜ் சத்தியம ங்கலத்துக்கும், பழனிசாமி, சிவக்குமார் ஈரோடு தாலுகா விற்கும், தாமோதரன் சென்னி மலைக்கும், கந்தசாமி தாளவாடிக்கும், வெங்க டேஷ் ஆப்பக்கூடலுக்கும், மூர்த்தி பவானிக்கும், எஸ்.சிவக்குமார் நம்பியூருக்கும், மேகநாதன் அறச்சலூருக்கும், முருகன் ஈரோடு வடக்கிற்கும், மாதேஸ்வரன் சென்னி மலைக்கும், வாசு கடத்தூரு க்கும், தாயளன் சிவகிரிக்கும், எம்.பழனிசாமி ஈரோடு தெற்கிற்கும், முருகேசன் மற்றும் வெங்கட்ராமன் திங்களூருக்கும், சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,594 கனஅடியாக அதிகரித்துள்ளது
    • ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 498 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2,594 கனஅடியாக அதிகரித்து வருகிறது.அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அமராவதி வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (57). இவரது 2-வது மகன் அகிலேஷ் (22). இவர் கேமிங் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்த அகிலேசுக்கு உடல் பருமன் காரணமாக அடிக்கடி மயக்கம் வந்து, பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார். இந்த நிலையில் சம்பவத்தன்று அகிலேசுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அகிலேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அகிலேஷ் தந்தை அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் "இ-சேவை" மையம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்ட அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    • மஞ்சள், குங்குமம், வளையல் வைத்து வழிபாடு

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை யொட்டி இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பமட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. இதையொட்டி அதி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகள வில் இருந்தது. அதே போல் கோபி செட்டிபாளையம் அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன், கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார். மேலும் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான் தோன்றியம்மன், கொள்ப்ப லூர் பச்சை நாயகியம்மன், அளுக்குழி செல்லியாண்டி அம்மன், வாய்க்கால் மேடு முத்து மாரியம்மன், சீதா லட்சுமி புரம் தண்டு மாரிய ம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனு க்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில்க ளில் கூழ் ஊற்றப்பட்டது.

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. அதேபோல் வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில், பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், தேவபுரம் கருமாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்கள் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இன்று ஆடி வெள்ளி க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை முதலே அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளி யம்பாளையம், புதுப்பாளை யம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், பச்சா ம்பாளையம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    சென்னிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அம்மன் கோவி ல்களில் இன்று ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடு நடை பெற்றது. சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள மாரி யம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடை பெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக ராகி கூழ் மற்றும் பாயாசம் வழங்கி னார்கள்.

    அதேபோல் சென்னி மலை அடுத்துள்ள முருங்க த்தொழுவு வாகைத்தொழுவு அம்மன் கோவிலில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேற்கு புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் சென்னிமலை டவுன் பிராட்டி அம்மன், எல்லை மகாளி அம்மன் கோவி லிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டது இதை யடுத்து இன்று அதிகாலை கோவில் ஏராளமான பெண்கள் வந்து அம்மனை வழிபட்டனர். மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் மணிக்கூண்டு கொங்கா லம்மன் கோவிலில் காலை வியாபாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அங்காரம் செய்ய ப்பட்ட சிறப்பு அங்காரம் செய்யபப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் ஈரோடு காரை வாய்க் கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரிய ம்மன், சூரம்பட்டி மாரி யம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
    • இதன் காரணமாக சுமார் 800 கோடி மதிப்பிலான சரக்கு பார்சல்கள் குடோன்களில் தேக்க மடைந்தன.

     ஈரோடு:

     ஈரோடு மாநகரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக சுமார் 800 கோடி மதி ப்பி லான சரக்கு பார்ச ல்கள் குடோ ன்களில் தேக்க மடை ந்தன. இத னைய டுத்து அனைத்து தொழில் சங்கத்தினர் தலைமையில் பேச்சுவா ர்ததை நடத்த ஒரு குழுவும், லாரி டிரா ன்ஸ்போ ர்ட் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவும் அமை க்கப்பட்டது. 2 கட்டமாக பேச்சு வா ர்த்தை நட ந்தது . இதனை த்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி இரண்டு தரப்பின ரிடமும் தொ லை பேசியில் பேசி பிரச்சி னை க்கு தீர்வு கா ண்ப தாக உறுதி அளி த்தார். இதனை ஏற்று தொழி லாளர்கள் த ங்கள் வேலை நிறுத்த போ ராட்ட த்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    • ஈரோடு-கோபியில் கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக ரேசன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டது
    • பயிற்சி ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.

    ஈரோடு,

    கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக கோபி சரகம் மற்றும் ஈரோடு சரகத்துக்குட் பட்ட ரேசன் கடை விற்ப னையாளர்களுக்கான பயிற்சி கோபி மற்றும் ஈரோட்டில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராஜ் குமார் தலைமை யில் நடந்தது. இதில் ஒரு குடும்பத்துக்கு ஒரு விண்ணப்பம் மட்டும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களிடம் வழங்க வேண்டும். காலை மற்றும் மாலை என இரு நேரங்க ளிலும் படிவம் வழங்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரேசன் கடை விற்பனையாளர்க ளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    பயிற்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்மு க உதவியாளர் (பொது) கணே ஷ், கூட்டுறவு சங்கங்க ளின் துணைப் பதிவாளர் நர்மதா, பொது வினியோக திட்ட துணைப் பதிவாளர் கந்தசாமி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் பாலாஜி, பொது வினியோக திட்ட கண்காணி ப்பாளர் கிருபாகரன், பொது வினி யோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவல ர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×