search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்றுக்குட்டியை கடித்து கவ்வி சென்ற சிறுத்தையால் பரபரப்பு- கிராம மக்கள் அச்சம்
    X

    சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருப்பதை படத்தில் காணலாம். 

    கன்றுக்குட்டியை கடித்து கவ்வி சென்ற சிறுத்தையால் பரபரப்பு- கிராம மக்கள் அச்சம்

    • சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.
    • உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி சமனா காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ராமசாமியின் விவசாய தோட்டத்தில் புகுந்து பிறந்து 15 நாட்களே ஆன கன்றுக்குட்டியை கடித்து கொன்று கவ்வி சென்றது. சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.

    இதனையடுத்து சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருப்பதாகவும், தனது தோட்டத்து வீட்டில் பசு மாட்டுடன் கட்டி வைத்திருந்த நிலையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கவ்வி இழுத்து சென்ற போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டதாகவும் டி.என்.பாளையம் வனத்துறையினரிடம் ராமசாமி தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின் பேரில் இன்று காலை வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் தேடி பார்த்தபோது அருகில் உள்ள சோளக்காட்டில் கன்றுக்குட்டி இறந்து நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர்.

    இந்த பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருவதால் பீதி அடைந்து உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×