என் மலர்tooltip icon

    ஈரோடு

    • புளியம்பட்டியில் பாதுகாப்பு இன்றி கிணறு திறந்து கிடக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டு, பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் நகராட்சி அலுவ லகம், கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. மேலும் மாணவ, மாணவி கள் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலை யாக இருக்கிறது. இந்த சாலை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை யாக உள்ளதால் இந்த ரோட்டில் எப்போது போக்கு வரத்து அதிகம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையையொட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஒரு கிணறு உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தில் இருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது. கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு வந்து, செல்ப வர்களும் மற்றும் பொது மக்கள் போக்கு வரத்து அதிகம் உள்ள இந்த சாலை என்பதால் இந்த கிணற்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மற்றும் விபத்துகள் நடக்காமல் இருக்க பாது காப்பு இன்றி திறந்து கிடக்கும் இந்த கிணற்றை இரும்பு கேட்டுகள் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே தீயில் கருகி முதியவர் உயிரிழந்தார்
    • பீடி புகைத்த போது பரிதாபம்

    ஈரோடு,

    ஈரோடு மாட்டம் சத்தி யமங்கலம் சிக்கரச ம்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பை யா கவுடர் (வயது 90). இவருக்கு சுப்பம்மாள் எ ன்ற மனைவியும், கதிர்வேல் என்ற மகனும் உள்ளனர். சுப்பையா கவுடர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். சுப்பம்மாள் பூ பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவ த்தன்று கதிர்வேல் வெளி யே சென்றுவிட்டார். சுப்ப ம்மாள் பூ பறிக்க சென்று விட்டார். இந்நிலையில் சுப்பையா கவுடர் பீடி குடிப்பதற்காக பீடியை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சி யை அங்கையே வீசி உள்ளா ர்.

    அந்த தீக்குச்சி அருகில் இருந்த பெட்டில் விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பெட்டில் தீப்பிடிக்க ஆரம்பித்து விட்டது. பெட் முழுவதும் தீ பரவியதால் அவரது உடலிலும் தீப்பற்றி யது. இனால் சுப்பையா கவுடர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்து வமனைக்கு அனுப்பி வை த்தனர். இந்நிலையில் சிகி ச்சை பெற்று வந்த சுப்பை யா கவுடர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார்.பின்னர் இதுகுறித்து அவரது உறவினர் வெற்றி வேல் சத்தியமங்கலம் போ லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    ஈரோடு,

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 45). இவருக்கு ஒரு மகளும், கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணன் (29) சத்தி யமங்கலம் ராஜ வீதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு வர்ஷிகா (5) என்ற மகளும், ரக்ஷித் (3) என்ற மகனும் உள்ளனர். கிரு ஷ்ணனுக்கு மதுக்கு டிக்கும் பழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடி க்கடி தகராறு ஏற்ப ட்டுள்து.

    இதையடுத்து சத்தி யமங்கலத்தில் ஜீவாவின் தாய் வீட்டின் அருகில் வாடைகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் கிருஷ்ணன் குடித்து வந்த தால் ஜீவா கோபித்து கொண்டு தனது குழந்தை களுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நி லையில் மனைவி, குழந்தை கள் பிரிந்த சோக த்தில் கிரு ஷ்ணன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொ ண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரி வித்தனர். பின்னர் கிருஷ்ணனின் தாய் சுமதி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடு த்தார். அதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது
    • சிறுத்தை தெங்குமரஹாடா, மங்கள வனப்பகுதியில் விடப்பட்டது

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுகுய்யனூர் பிரிவு அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. புதர்களால் நிறைந்து கிடக்கும் இந்த பாழும் கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அந்த பகுதியாக வந்த போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

    சுமார் 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் இல்லா ததால், சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமி ங்கும் ஆக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது சிறுத்தை கிணற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த னர். அதன் பேரில் வனத்து றை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை யை மீட்பது குறித்து ஆலோ சனை நடத்தினர்.

    சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து புதுப்பீர்கடவு, ராஜன்நகர், பண்ணாரி ஆகிய பகுதி களில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை யை பார்க்க குவிய தொட ங்கினர். பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருவதால், வனத்து றையினர் அனைவரையும் வெளியேறும்படி அறிவு றுத்தினர். முதலில் சிறு த்தைப் புலியை உயிருடன் பிடிக்க கிரேனில் கூண்டை கட்டி உள்ளே கோழியை கிணற்றுக்குள் இறக்கினர். ஆனால் சிறுத்தை புலி கூண்டுக்குள் வரவில்லை.

    இதைத் தொடர்ந்து நீளமான ஏணியை விட்ட னர். ஆனால் அப்போதும் சிறுத்தை வரவில்லை. இறுதியாக கூண்டுக்குள் உயிருடன் ஒரு ஆட்டை போட்டு மூடி மீண்டும் கிணற்றுக்குள் உள்ளே இறக்கினார்கள். அதைப் பார்த்து சிறுத்தை ஆட்டை பிடிப்பதற்காக கூண்டுக்குள் வந்து சிக்கிக்கொண்டது. இதையடுத்து வனத்துறை, தீயணைப்பு துறையினர் கூண்டை மேலே இழுத்தனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த வாகன த்தில் கூண்டை ஏற்றி சிறுத்தையை தெங்குமர ஹாடா, மங்கள வனப்பகுதி யில் பத்திரமாக விட்டனர். கூண்டை திறந்ததும் சிறுத்தை வனப் பகுதிக்குள் ஓடி சென்றது. இதனால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • ஈரோட்டில் நடப்பு பருவத்திற்கான இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    • எண்ணெய் வித்துக்கள் 20.79 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அர க்கன்கோட்டை பாசனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. காலிங்க ராயன் பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்த மாதம் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தவிர மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசனத்திற்கு அட்டவணைப்படி அடுத்த மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதையடுத்து இடு பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- விவசாயிகளுக்கு நடப்பாண்டிற்கு தேவையான இடு பொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல் விதைகள் 147.48 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 18. 35 மெட்ரிக் டன், பயறுவகைகள் 2 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 20.79 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இதேபோல ரசாயண உரங்களான யூரியா 4121 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 3790, பொட்டாஷ் 3436, காம்ப்ளக்ஸ் 11729 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மொடக்குறிச்சி அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் முதியவர் கைது செய்யபட்டார்
    • தலைமறைவான 6 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

    ஜூலை.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசி லம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டி பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் சிவாஜி யிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்பவரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்ச த்துக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கு வதாக கூறினார்.

    இதையடுத்து சிவாஜி ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து க்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ்குமார் மற்றும் டிரைவர் குபேந்தி ரன் ஆகியோருடன் லக்கா புரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார். இது குறித்து ராஜ்குமாரு க்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 பேருடன் சம்பவ இடத்துக்கு வந்தார். இதை தொடர்ந்து ராஜ்குமார் தனது காரில் சிவாஜி, செந்தில் ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    இதையடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரில வந்த ஒரு காரில் இருந்து 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனை அடுத்து ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது. இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விவசாயிடம் பணம் பறித்த கார், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் நாகம்பள்ளி அரசு மருத்துவமனை அடுத்த போஸ்ட் ஆபீஸ் தெரு மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (58) என்ப வரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் தலை மறைவாக உள்ள 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் குறிப்பிடபட்டுள்ளது
    • பவானிசாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்ப–டுவதால் அணை யின் நீர்மட்டமும் தொ டர்ந்து குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.90 அடியாக உள்ளது.

    அணை க்கு நேற்று வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொ ண்டிருக்கிறது. அணையில் இருந்து காலி ங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்ப ள்ளி- அரக்கன் கோட்டை பாசன த்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்க ப்பட்டு வருகிறது. இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவ ரப்படி 31.71 அடியா–கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 20.96 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்ம ட்டம் 22.05 அடியாகவும் உள்ளது.

    • வருங்கால வைப்பு நிதி குறைகேட்பு கூட்டம் நடக்க உள்ளது
    • கூட்டம் வருகிற 27-ந் தேதி திண்டல் மாருதி நகரில் உள்ள வேளாளர் வித்யாலயா பள்ளியில் நடக்கிறது

    ஈரோடு,

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் நிதி ஆப்கே நிகட் அதாவது வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற பெயரில் விழிப்புணர்வு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட அளவிலான குறைதீர்ப்புகூட்டம் வருகிற 27-ந் தேதி திண்டல் மாருதி நகரில் உள்ள வேளாளர் வித்யாலயா பள்ளியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு மண்டல வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமை தாங்கி பொது மக்களின் குறைகளை கேட்கிறார். இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரையும்,தொழில் அதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் நேரில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கவுந்தப்பாடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தீயணைப்பு த்துறையினர் மாணவர்களிடத்தில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மாணவர்கள் தங்களையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்று செய்முறை விளக்கம் செய்து காட்டினர்

    கவுந்தப்பாடி,

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பவானி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு சார்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்க டேசன் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான பாவா தங்கமணி தொடங்கி வைத்தார்.

    தீயணைப்பு த்துறையினர் மாணவர்களிடத்தில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வது, தங்களையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்று செய்முறை விளக்கம் செய்து காட்டி மாணவர்களி டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள். இதையடுத்து மாணவர்க ளுக்கு பயிற்சி அளிக்க ப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டார்கள். இதற்னான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு வினர் செய்திருந்திருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யபட்டனர்
    • 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது

    ஈரோடு,

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோக்கரை யன் பேட்டையை சேர்ந்த சதிஸ் (வயது 28), கோகுல் (22), முகமது தஸ்தகிர் (22) ஆகிய 3 பேரும் ஈரோடு மொடகுறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த ஈரோடு டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்றுகொண்டிருந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா வை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர். 

    இதேபோல் பெருந்துறை தலையம்பாளையம் பிரிவு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரவி (51) என்பவர் தடை செய்யபட்ட புகை யிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். தகவல றிந்த பெருந்துறை போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்த னர். பின்னர் ரவியை கைது செய்து வழக்குபதிவு செ ய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். கோபிசெட்டிபாளையம் ரேசன் கடை தெருவை சேர்ந்தவர் தம்பா என்ற நந்தகுமார் (25). இவர் கோபி கமலா ரைஸ் மில் தெருவில் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்றுகொண்டிருந்த தம்பா என்ற நந்தகுமாரை கைது செய்து அவர் வைத்தி ருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். பசுவனபுரம் அருகே அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை ((55) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். தகவல றிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற அண்ணாதுரை யை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (38). இவர் அதே பகுதியில் அரசு அனுமதி யின்றி மதுபாட்டி ல்கள் விற்பனை செய்து கொண்டி ருந்தார். தகவலறி ந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற கோடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். மேலும் அவர் வைத்திருந்த 22 மதுபாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பவானி அரசு மருத்துவமனையில் நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்
    • சமையலறை ஊழியர்கள் உள் நோயாளி களுக்கு உணவு எடுத்து செல்ல வசதியாக 2 ட்ராலி களும், பாத்திர ங்களை கழுவி சுத்தமாக வைத்து க்கொள்ள ஸ்லாப் கல் அமைத்து தர வேண்டு கோள் விடுத்தனர்.

    பவானி,

    பவானி அரசு மருத்துவ மனையில் உள் நோயாளி களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பவானி நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார். இதில் கவுன்சிலர்கள் விஜய் ஆனந்த், மோகன்ராஜ் மற்றும் திலகவதி சரவணன், தலைமை மருத்துவர் கோபா லகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்ேபாது மருத்து வமனை சமையலறை ஊழியர்கள் உள் நோயாளி களுக்கு உணவு எடுத்து செல்ல வசதியாக 2 ட்ராலி களும், பாத்திர ங்களை கழுவி சுத்தமாக வைத்து க்கொள்ள ஸ்லாப் கல் அமைத்து தர வேண்டு கோள் விடுத்தனர். இதனைத்தொடர்ந்து நகர் மன்ற தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரு கோரிக்கை களையும் கவுன்சிலர்கள் விஜய் ஆன ந்த், மோகன்ராஜ் இருவரும் செய்து தர உறுதியளித்தனர்.

    • கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நெசவாளர்கள் 60 பேருக்கு ரூ.30 லட்சம் கடன் வழங்கபட்டது
    • விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்

    கவுந்தப்பாடி,

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தலைவர், வாடிக்கை யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் கவுந்த ப்பா டி நெசவாளர் கூட்டு றவு சங்க உறுப்பினர்கள், க.புதூர் காஞ்சிகோவில், செந்தாம் பாளையம் கலை வாணர், தர்மபுரி திருவள்ளு வர், கவுண்ட ம்பாளையம் காமராஜர் சங்கம் மற்றும் நல்லா கவுண்டன்பாளையம் நல்லி டெக்ஸ் ஆகிய நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 60 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.30 லட்சம் கடன் வழங்க ப்ப ட்டது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்.

    கவுந்தப்பாடி கிளை மேலாளர் வேலுமணி வர வேற்றார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.  இந்நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்க மணி, மாவட்ட கவுன்சிலர் சிவ காமி சரவணன், கவுந்த ப்பாடி நெசவாளர் கூட்டு றவு சங்க தலைவர் மாதே ஸ்வரன், ஓடத்துறை திரு வேங்கடம், அய்ய ம்பாளையம் ரவிச்சந்திரன், மணல் சோமு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேலாளர்கள், கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகள் கடன் மேற்பார்வையாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேற்பார் வையாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    ×