என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதா ரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதே சமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்ட மும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது.அணைக்கு நேற்று வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2,594 கனடியாக அதிகரித்து வருகிறது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது

    • தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, குட்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் காளிதாஸ் (33). டீ மாஸ்டர்.

    இவர் பவானி வர்ணபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவி சில்பா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பவானி வரதநல்லூர் பிரிவில் தனது அக்கா நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி சில்பா தனது தாய் வீட்டிற்கு கோவை சென்றார். 3 நாட்களும் விஜய் காளிதாஸ் குடித்துவிட்டு கடைக்கு வேலைக்கு செல்லாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது கீழே விழுந்து உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று தனது அக்கா கணவரிடம் காவிரி ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற விஜய் காளிதாஸ் வெகு நேரம் ஆகியும் வராத நிலையில் அவர் குளிக்க சென்ற வரதநல்லூர் மயான அருகிலுள்ள காவிரி ஆற்றிக்கு சென்று பார்க்கும் பொழுது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.
    • பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நசியனூரை அடுத்துள்ள முள்ளம்பட்டி, இச்சிவலசு பகுதியைச் சேர்ந்தவர் நாகதேவி (63). இவரது கணவர் கடந்த 13 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் உமாசங்கர் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    உமா சங்கர் மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகதேவி கடந்த 3 மாதங்களாக திங்களூர் அருகே உள்ள சின்னவீர சங்கிலி, அய்யன்காட்டுத் தோட்டம் பகுதியில் உள்ள கால் நடை மருத்துவர் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், வீட்டின் பின்புறம் கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியி லேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • அம்மனுக்கு வளையல் அணி விக்கப்பட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் ரோடு மாரியம்மன், மற்றும் பிளாக் மாரியம்மன் கோவி லில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அணி விக்கப்பட்டு விளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரிய ம்மனுக்கு பால், தயிர், திரு மஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்ய ப்பட்டது.

    இதைத்தொட ர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து விளக்கு பூஜையை தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தாலி கயிறு, வளையல்கள். பக்தர்களுக்கு வழங்கினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்ப ட்டது.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி சருகு மாரியம்மன் கோவிலில் ஆடி பூரத்தை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்து தீபாரா தனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு விளக்கு பூஜை தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தாலி சரடு. வளையல்கள். பக்தர்களுக்கு வழங்கினர் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மது விற்று கொண்டிருந்த ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் உக்கரம் வாய்கால் கரை அருகே சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போ து அங்கு இருசக்கர வாகனத்தில் மது விற்று கொண்டிருந்த உக்கரம் பகுதியை சேர்ந்த ராமசாமியை (வயது 65) போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறி முதல் செய்த இன்ஸ்பெக்டர் துரைபாண்டி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் முருகம்பட்டியை சேர்ந்த வீரபாண்டியன் (42) என்பவர் பெருந்துறை பகு தியில் அரசு மதுபானங்களை விற்று கொண்டிரு ந்தார்.

    தகவலறிந்த பெரு ந்துறை போலீசார் வீரபா ண்டியனை கைது செய்து அவரிடமிருந்த 6 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதி யை சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார்.

    தகவலறிந்த பவானிசாகர் போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜூ (31). இவர் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் அருகே மது விற்று கொண்டிருந்தாக ஈரோடு தெற்கு போலீசார் பாண்டியராைஜ கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த குமார் (62) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார். தகவலறிந்த கவுந்தபாடி போலீசார் குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை-காங்கே யம் சாலையில் ஈ.சி.ஆர் நகரை சேர்ந்த தண்டபாணி (40) என்பவர் போதை பொருட்களை விற்றதாக சென்னிமலை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் தண்டபாணியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.
    • உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி சமனா காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ராமசாமியின் விவசாய தோட்டத்தில் புகுந்து பிறந்து 15 நாட்களே ஆன கன்றுக்குட்டியை கடித்து கொன்று கவ்வி சென்றது. சத்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்து பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டியை காணவில்லை.

    இதனையடுத்து சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருப்பதாகவும், தனது தோட்டத்து வீட்டில் பசு மாட்டுடன் கட்டி வைத்திருந்த நிலையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கவ்வி இழுத்து சென்ற போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டதாகவும் டி.என்.பாளையம் வனத்துறையினரிடம் ராமசாமி தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின் பேரில் இன்று காலை வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் தேடி பார்த்தபோது அருகில் உள்ள சோளக்காட்டில் கன்றுக்குட்டி இறந்து நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர்.

    இந்த பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருவதால் பீதி அடைந்து உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • 35 வயது மதிக்கத்தக்க ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
    • வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைகிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு உள்ளிட்ட வனத்தை யொட்டிய விவசாயம் நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடம்பூர் வனத்துறையில் இது குறித்து புகார் அளித்து இருந்தனர்.

    மேலும் பயிர்களை நாசம் செய்து வரும் இந்த ஒற்றை காட்டு யானை பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடம்பூர் வனத்துறையினர் உயரதிகாரிகளின் அனுமதியை தற்போது பெற்றுள்ள நிலையில் 35 வயது மதிக்கத்தக்க அந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று காட்டு யானை பிடித்து மற்றொரு வனப்பகுதியில் கொண்டு செல்ல விடுவதற்கு வனத்துறை சார்பில் ஒசூர் பகுதியில் இருந்து லாரியும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவ குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து அந்த ஒற்றை யானை செல்லும் வழி தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஒற்றை காட்டு யானையானது சமதளமான விவசாய நிலங்களையொட்டி வரும் போது தான் மருத்துவ குழுவால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழு இணைந்து ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வரும் நிலையில் மயக்க ஊசி செலுத்தி இந்த காட்டு யானை வேறு எந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிகழ்வை பார்க்க மலைகிராம மக்கள் ஆங்காங்கே வேடிக்கை பார்த்து வருவதால் காட்டு யானையால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • பழையகோட்டை பகுதி கீழ்பவானி பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க, பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதில், அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தினமும் ஒரு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி 3-வது நாளாக இன்று காலை, ஈரோடு அடுத்துள்ள நத்தக்காடையூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆகஸ்ட் 15 அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும்.

    நல்ல நிலையில் இருந்த மண்கரைகளை சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண்: 276ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும். 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    வாய்க்கால் கரையில் மண் திருட்டு, நீர் திருட்டு மற்றும் மரங்களை வெட்டி திருடுவது மற்றும் பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரண மானவர்கள், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இதில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை, இயற்கை ஆர்வலர் பொடாரன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி செங்கோட்டையன் மற்றும் வெள்ளியங்காடு, மருதுறை, நத்தக்காடையூர், பழையகோட்டை பகுதி கீழ்பவானி பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர், கேர்மாளம், திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 50 -க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு மின்வினியோகம் வழங்கபட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி யளவில் வீசிய சூறாவளி காற்றால் வனப்பகுதி வழியாக வரும் மின்கம்பி அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிபட்டு வந்தனர். மலை கிராமமான ஆசனூர், அரேபாளையம் ,குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவள்ளம் என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    மின்தடையால் விடிய விடிய பொது மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். தொடர்ந்து இன்று 3- வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடிநீர் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் மலைகிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை இதே போல் மின் கம்பி தூண்டிக்கபட்டு விடுகிறது.மின்பழுதை சரி செய்ய போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் 1 நாள் அல்லது 2 நாட்கள் கழித்துதான் மின்பழுது சரி செய்யபடுகிறது. இதே நிலைமை கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் குடிநீர் இல்லாமலும் பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமலும் சிரமம் அடைந்து வருகின்றனர். சத்தியமங்கலம் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமை யானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி சுற்றி திரிகிறது.
    • வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை உணவு தேடி பங்களாப்புதூர் வழியாக எருமைக்குட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டப்பகுதியில் விளை நிலங்கள் வழியாக சுற்றி திரிகிறது.

    இந்த தகவலறிந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் தற்போது யானையை கண்காணித்து ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
    • வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.

    பவானி:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

    பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.

    2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.

    அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.

    மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.

    அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

    வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆடி பூரம் விழாவையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
    • இதை தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிேஷம், அலங்காரம், தீபாரானை நடந்தது.

    சென்னிமலை:

    ஆடி பூரத்தினை முன்னிட்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பெரிய நாயகி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை யொட்டி கோவிலில் யாக பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிேஷம், அலங்காரம், தீபாரானை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஊஞ்சலில் எழுந்த ருளினார். ஊஞ்சலில் வைத்து பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து ஒதுவார் ஆனந்த சாமிகள் பாட்டு பாடி ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலை மையில் மதி குருக்கள், தபுராஜ் சிவாச்சாரியார் ஆகியோர் அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×