search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one day in"

    • வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஈரோடு நகரியம் கோட்டம், தெற்கு கோட்டம், பெருந்துறை கோட்டங்களில் வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம்கள் செயற்பொறியாளர்கள் நாச்சிமுத்து, சாந்தி, வாசுதேவன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், அந்தந்த மின் பிரிவு அலுவலகங்களில் நடந்தது.

    இதில் பெயர் யமாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களில் ஈரோடு தெற்கு மின் கோட்டத்தில் 200 பேருக்கும், நகரியம் மின் கோட்டத்தில் 236 பேருக்கும், பெருந்துறை கோட்டத்தில் 150 பேர் என 586 பேருக்கு ஒரே நாளில் பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

    மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இந்த மாதம் இறுதி வரை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் வீட்டு வரி ரசீது, கிரைய பத்திர நகல், பாக பிரிவினை பத்திர நகல், கணினி பட்டா,

    அரசால் வழங்கப்பட்ட உரிமை சான்று, வாரிசு சான்று, பிணையுறுதி பத்திரம், பெயர் மாற்ற கட்டணம் ரூ.726-உடன் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.

    • உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • நேற்று ஒரே நாளில் 6 உழவர் சந்தைகளில் 61.89 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் மற்ற இடங்களை விட இங்கு காய்கறி விலை குறைவாக விற்கப்படுகிறது.

    இதனால் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று முகூர்த்த நாள் மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை முதலே உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று ஒரே நாளில் 6 உழவர் சந்தைகளில் 61.89 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. இந்த காய்கறிகள் ரூ.18 லட்சத்து 4 ஆயிரத்து 735-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×