என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காஞ்சிகோவில் பகுதியில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அவினா சிலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரன் (வயது 55). இவரது மகன் தீபக்கு மார் (20). இவர் குமார பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் டெக்ஸ்டை ல் ெடக்னாலஜி 4-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுைற கார ணமாக கடந்த 1 மாதமாக தீபக்குமார் வீட்டில் இருந்து வந்து ள்ளார். இந்நிலையில் தீப க்குமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபக்குமாரை பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர்கள் தீபக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து மாரன் காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ. 9.63 லட்சத்துக்கு எள் விற்பனை நடந்தது
    • இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 128.69-க்கு விற்பனையானது

    ஈரோடு,

    மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 83 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 128.69-க்கும், அதிகபட்சமாக ரூ. 156.89-க்கும், சராசரி விலையாக ரூ.141.69-க்கும் விற்பனையானது.இதேபோல, சிவப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.116.39-க்கும், அதிகபட்சமாக ரூ.153.69-க்கும், சராசரி விலையாக ரூ. 135.10-க்கும் விற்பனையானது. வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.143.19-க்கும், அதிகபட்சமாக ரூ.180.59-க்கும், சராசரி விலையாக ரூ.163.70-க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 191 கிலோ எடையிலான எள் ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்து 487க்கு விற்பனையானதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்துள்ளது
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை டவுண் குரூப் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகர் (வயது 39) என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத ஆண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபி செட்டிபாளையம் அருகே பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மதியவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (60) என தெரிய வந்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலீசார் 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதே போல் கோபி அடுத்த அக்கரை கொடிவேரி, மாக்கினங்கோம்பை, அரசூர் சந்த ஆகிய பகுதிகளில் போலீசார் நேர்ந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பொது இடத்தில் மது குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து அரியப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி (28), மாக்கிங்கோம்பை கவுசிகன் (19) கமலேஷ (19), ஆகிய 3 பேரை பொது இடத்தில் மது குடித்ததாக வழக்கு பதிவு அவர்கள் 3 பேரை கைது செய்தனர்.

    • வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கோவில் வேலில் எலுமிச்சம் பழம் குத்தி வழிபாடு செய்தனர்
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்து உள்ள பிச்சாண்டாம் பாளையத்தை சேர்ந்த விவ சாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து நூதன முறையில் வழிபாடு நடத்தினர். இதையடுத்து அந்த பகுதி விவசாயிகள் வாய்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. அதை நிறுத்த வேண்டும் என வேண்டுதல் வைத்தும், வெள்ளோடு அண்ணமார் கோவில் மற்றும் வெள்ளோடு கருக்கண்ண மார் கோவி ல்களில் நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து பிச்சா ண்டாம்பாளைய த்தைச் சேர்ந்த விவசாயிகள் கோவி லில் உள்ள வேலில் எலுமிச்சம் பழம் குத்தி வழிபாடு நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
    • வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி சமனாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து கடித்து கொன்றது.

    அந்த கன்று குட்டியின் உடல் பாகங்கள் அருகே உள்ள விவசாய சோளகாட்டில் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அந்த சிறுத்தை சோளகாட்டுக்கு வந்தது. அங்கு சிதைந்த நிலையில் கிடந்த கன்று குட்டியின் மீதமுள்ள உடல் பாகங்களை உணவுக்காக எடுத்து சென்றதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

    இதனால் சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை விரைவில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழுவும் வரவழைக்கப்பட்டது.
    • தற்போது கட்டையன் யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கட்டையன் என்கிற காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு மூலக்கடம்பூர் தொண்டூர் கடம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட வனத்தையொட்டிய விவசாயம் நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    மேலும், பயிர்களை நாசம் செய்து வரும் கட்டையன் யானை பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடம்பூர் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழுவும் வரவழைக்கப்பட்டது.

    அதே போன்று காட்டு யானை பிடித்து மற்றொரு வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கு வனத்துறை சார்பில் ஒசூர் பகுதியில் இருந்து லாரியும் வரவழைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மருத்துவ குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து யானை செல்லும் வழி தடங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    காட்டு யானை சமதளமான விவசாய நிலங்களை ஒட்டி வரும்போது மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தயார் நிலையில் இருந்தனர்.

    இந்நிலையில் ஓசப்பாளையம் அடுத்த பெலுமுகை பகுதியில் விளை நிலங்களில் கட்டையன் யானை சுற்றி திரிவதாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் கட்டையன் யானைக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தினர்.

    ஒரு மணி நேரத்திற்க்கு பிறகு யானை மயக்கமடைந்த நிலையில் கிரேன் மூலம் கயிறு கட்டப்பட்ட ஹைட்ரா லிக் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை பவானிசாகர் அடுத்த தெங்குமர ஹாடா வனப்பகுதியில் மங்களப்பட்டி எனும் அடர்ந்த வனப்பகுதியில் கட்டையன் யானை விடப்பட்டது.

    தற்போது கட்டையன் யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மலைப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
    • வேலைக்கு செல்லும் பணியாளர்களும் அவதி அடைந்தனர். வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அருகில் உள்ள ஊருக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் அந்தியூர்-மைசூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர். இதே போல் வேலைக்கு செல்லும் பணியாளர்களும் அவதி அடைந்தனர். வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கெட்டி சமுத்திர ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதி பெண்கள் சீரான குடிநீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக கூறினர். இதனை அடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 30 நிமிடம் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.
    • தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டி பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார்.

    இந்த நிலையில் சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்பவரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சத்துக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக கூறினார்.

    இதையடுத்து சிவாஜி ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ்குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.

    இது குறித்து ராஜ்குமாருக்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 பேருடன் சம்பவ இடத்துக்கு வந்தார். இதை தொடர்ந்து ராஜ்குமார் தனது காரில் சிவாஜி, செந்தில் ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    இதையடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரில் வந்த ஒரு காரில் இருந்து 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனை அடுத்து ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது.

    இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் விவசாயிடம் பணம் பறித்த கார், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கரூர் மாவட்டம் நாகம்பள்ளி அரசு மருத்துவமனை அடுத்த போஸ்ட் ஆபீஸ் தெரு மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான அரசு அதிகாரி போல் போலீஸ் உடை அணிந்து நடித்த நாமக்கல் மாவட்டம் வேலூர் அடுத்த போத்தனூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கட்டான் மகன் மாதேஷ் (59) என்பவரை பாசூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு நகர குற்றப்பிரிவு மற்றும் மொடக்குறிச்சி போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாசூரில் பதுங்கி இருந்த மாதேஷை கைது செய்தனர்.

    மாதேஷிடம் போலீசார் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்க சொகுசு காரை பயன்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் காரில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியதுடன் தன்னை பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிவதாக போலி அடையாள அட்டைகள் வைத்து கொண்டு அதை பல இடங்களில் காண்பித்து தப்பித்து வந்துள்ளார். இந்த காருக்கு 10-க்கும் மேற்பட்ட நம்பர் பிளேட்டுகள் மற்றும் காரையும் பயன்படுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து அந்த காரை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் கட்டு, கட்டாக வெள்ளை தாள் கொண்ட போலியான ரூபாய் நோட்டுகள், போலியான தங்க நகைகள், தராசு மற்றும் எடை கற்கள், போலீஸ் உடை, உள்ளிட்ட வைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    தொடர்ந்து மாதேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான நடந்த கொடுமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    ஆனால் ரெயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும் போலீசாரின் தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் காளைமாட்டு சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலா ளர் சிந்தனை ச்செல்வன் தலைமையில், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் அறிவு தமிழன், மேற்கு மண்டல செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் நிர்வாகிகள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து ஊர்வலமாக ரெயில் மறியலுக்கு செல்ல தொடங்கினர்.

    அப்போது காளை மாட்டு சிலை பகுதியில் தயாராக இருந்த டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர்.

    அதை மீறி நிர்வாகிகள் செல்ல முயன்றதால் 5 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியி னர் கைது செய்யப்பட்டு தயார் நிலையில் வை க்கப்பட்டிருந்த வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • ஆத்திரம் அடைந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது.
    • 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி செல்லும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதமாக ஒற்றை யானை பகல் நேரங்களிலேயே உலா வருகிறது. விவசாய பூமியில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடம்பூர் அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை கடுமையாக துரத்தியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்த ஒருவர் திடீரென யானை துரத்தி வருவதை கண்டு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நண்பருடன் ஓடி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. நல்ல வாய்ப்பாக 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த அந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள்ளே சென்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள, வாகன ஓட்டிகள் அஞ்சினார்கள். 

    • சிவசங்கரி தனக்கு தானே உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே புது அண்ணாமலைபாளை யத்தை சேர்ந்தவர் மதிய ழகன் (வயது 68). இவரது மகள் சிவசங்கரி திரும ணமான 2 வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வந்து தந்தை மதியழகனுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலை யில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதியழகனின் மனைவி மல்லிகா இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சிவசங்கரி தனக்கு தானே உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் இதுகுறித்து சிவகிரி காவல் நிலைய த்திற்கு தகவல் தெரிவி க்கபட்டது. இதையடுத்து போலீசார் சிவசங்கரி உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து மதியழகன் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×