என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை முயற்சி
    X

    டி.எஸ்.பி. தங்கவேல் விசாரணை நடத்திய காட்சி

    நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை முயற்சி

    • கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் சேகர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (63). இவர் கோபி-சக்தி மெயின் ரோடு, கச்சேரிமேடு பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த சேகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற பிஸ்டல் துப்பாக்கியால் நெற்றி மீது தனக்குத்தானே சுட்டு கொண்டார்.

    திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்த அவரது மகன், மனைவி அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த பார்த்தபோது சேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக சேகரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேகர் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் சேகர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×