search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lock breaking and theft"

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
    • சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தி யமங்கலம் சாலையில் ஜெயக்குமார் என்பவர் சி.சி.டி.வி. கடை நடத்தி வருகி றார். இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்கு மார் அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது சுமார் 20 ஆயிரம் மதிப்பு ள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவி த்தார். அங்கு வந்த போலீ சார் அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருவது, கடையில் இருந்த பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

    இதையடுத்து இந்த பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேடசந்தூர் பெரியகடை வீதியில் செல்போன் கடை, நகை பாலீஷ் போடும் கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகைக்கடை ஆகிய 5 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
    • அடுத்தடுத்து கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெரியகடை வீதியில் செல்போன் கடை, நகை பாலீஷ் போடும் கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகைக்கடை ஆகிய 5 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் வேடசந்தூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    மேலும் கடை உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விசாரணை நடத்தியபோது, நகை பாலீஷ் கடையில் இருந்த ரூ.14 ஆயிரம், செல்போன் கடையில் இருந்த ரூ.8000 ஆகியவை திருடு போயிருந்தது.

    மேலும் மற்ற 3 கடைகளில் பணம் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த கூட்டுறவு வங்கி நகை கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கி காவலாளி கூச்சலிடவே கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இதே போல் சீத்தமரம் நால்ரோட்டில் அடுத்தடுத்து 2 கடைகளிலும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×