என் மலர்
ஈரோடு
- வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஈரோடு நகரியம் கோட்டம், தெற்கு கோட்டம், பெருந்துறை கோட்டங்களில் வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்கள் செயற்பொறியாளர்கள் நாச்சிமுத்து, சாந்தி, வாசுதேவன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், அந்தந்த மின் பிரிவு அலுவலகங்களில் நடந்தது.
இதில் பெயர் யமாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களில் ஈரோடு தெற்கு மின் கோட்டத்தில் 200 பேருக்கும், நகரியம் மின் கோட்டத்தில் 236 பேருக்கும், பெருந்துறை கோட்டத்தில் 150 பேர் என 586 பேருக்கு ஒரே நாளில் பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இந்த மாதம் இறுதி வரை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் வீட்டு வரி ரசீது, கிரைய பத்திர நகல், பாக பிரிவினை பத்திர நகல், கணினி பட்டா,
அரசால் வழங்கப்பட்ட உரிமை சான்று, வாரிசு சான்று, பிணையுறுதி பத்திரம், பெயர் மாற்ற கட்டணம் ரூ.726-உடன் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.
- பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடி மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து கான்கிரீட் திட்ட பணிகள் தொடங்க ப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்க ளுக்கும் மேலாக பொது ப்பணித்துறை மற்றும் கட்டு மான நிறுவனம் கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்ற னர்.
இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் மற்றும் அதிகாரி கள் கூறியபடி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும்.
மேலும் கான்கி ரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276யை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி கீழ் பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் இன்று காலை கீழ்பவானி கால்வாயின் கரையில் 100-க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதை தொடர்ந்து அவர்கள் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276-யை ரத்து செய்ய வேண்டும். அரசு அளித்த வாக்குறுதியின் படி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டை:
பவானி கோட்டம் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (26-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிபுதூர், தொட்டிக்கிணறு, வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர்,
ஆலாமரத்து தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.
- நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக கோபி காளியண்ணன் தெருவை சேர்ந்த அங்கமுத்து (36) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அங்கமுத்து கடந்த வருடம் அவருக்கு தெரிந்த 10 நபர்களை வரவழைத்து தனக்கு குடும்ப கஷ்டம் இருப்பதாகவும், அதனால் பணம் தேவைப்படுவதாகவும், என்னிடம் தனித்தனியாக நகைகள் உள்ளது. எனது பெயரில் வங்கியில் வைக்க முடியாது. எனவே உங்கள் கணக்கில் நகைகளை வைத்து பணத்தை எடுத்து கொடுக்க சொல்லி உள்ளார்.
அதன்படி அந்த 10பேரும் அங்கமுத்துவிடம் நகைகளை வாங்கி அதனை மீண்டும் வங்கியில் அடமானம் வைப்பது போல் வைத்து பணத்தை வாங்கி அவரிடமே கொடுத்துள்ளனர். நகை மதிப்பீட்டாளராக இருந்த அங்கமுத்து அந்த நகைகளை அவர்கள் பெயரில் கணக்கு வைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் அங்கமுத்து கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 5-ந் தேதி வரை உடல்நலம் சரி இல்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அங்கமுத்து தான் நகைகளை கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்று கொண்டார் என்றும் கூறினர். அங்கமுத்து ரூ. 41 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து வங்கியின் துணை மேலாளர் இதுகுறித்து கவுந்தபாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அங்கமுத்துவை தேடி வந்தனர்.
இந்நிலையில் அங்கமுத்துவை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
- தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.
இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் டிரைவரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதனையடுத்து தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் வனத்துறையினர் லாரி ஓட்டுனரை தாக்கிய காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு லாரி ஓட்டுனரை வனத்துறையினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
- பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
மேட்டுப்பாளையம்:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காரமடை அடுத்த பில்லூர் அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்.
நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி குந்தா பகுதியில் 20 மி.மீ மழை பெய்து உள்ளது. இதேபோல கெத்தையில் 6 மி.மீ, பரளியில் 5 மி.மீ, பில்லூர் அணைப்பகுதியில் 6 மி.மீ, அவலாஞ்சியில் 382 மி.மீ, அப்பர் பவானியில் 41 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அங்கு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக உள்ளது. எனவே பில்லூர் அணை விரைவில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, லிங்காபுரம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, காந்தவயல் உள்ளிட்ட பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
- நேற்று காலை 78.54 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.56 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 78.54 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.56 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 5,637 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 7,607 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக போதை மாத்திரை பயன்படுத்துவது, போதை ஊசி போடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாஸ்திரி நகரில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவர் பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (19) என்பதும், சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்ததும் தெரிவந்தது.
அவரை சோதனை செய்தபோது 100 போதை மாத்திரை வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஹரிஷ் என்ற நபரிடம் போதை மாத்திரை வாங்கியதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து ஹரிசை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். ஹரிஷ் மீது ஏற்கனவே சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஹரிசை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் போதை மாத்திரை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தட்டாங்காடு பகுதியை சேரந்தவர் சுப்பிரமணி (வயது 71). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு ரமேஷ்குமார் (41) என்ற மகன் உள்ளார். சுப்பிரமணி நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ரமேஷ்குமாருக்கு ஈரோடு வைராபாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் 70 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது இறந்தவர் சுப்பிரமணி தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமார் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்
- போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமிபாளைய த்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 38). இவரது கணவர் சரவணகுமார் (42) கட்டிட வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பழுதாகி உள்ள மின் மோட்டாரை சரவணகுமார் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளதால் திடீரென மின்கசிவு ஏற்ப ட்டு சரவணகுமாரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. உடனே அக்கம் பக்கத்தினர் சரவணகு மாரை ஆம்புலன்ஸ மூலம் கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவண குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நிர்மலா இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்
- போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், அரச்சலூரை அடுத்த கொமராபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அரச்சலூரில் உள்ள ஒரு கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்து உள்ளார். சம்பத்தன்று அவரது சகோதரர் ரவிச்சந்திரன் கரும்பு ஆலையில் உள்ள அவரது அண்ணனின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு இறந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார். இது குறித்து ரவிச்சந்திரன் அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- 180 தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியா ளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.சிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பு ஊசிகள் செலுத்துதல் மற்றும் மருந்துகள் வழங்கினர். மருத்துவ முகாமை நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், ஆணையாளர் சசிகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். துப்புரவு அலுவலர் சோழராஜ் துப்புரவு ஆய்வா ளர்கள் செந்தில்குமார் கார்த்திக் சௌந்தரராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 180 தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






