என் மலர்
உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டி அருகே சி.சி.டி.வி. கடையின் பூட்டை உடைத்து திருட்டு
- புளியம்பட்டி அருகே சி.சி.டி.வி. கடையின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது
- இதகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தி யமங்கலம் சாலையில் ஜெய க்குமார் என்பவர் சி.சி.டி.வி. கடை நடத்தி வருகி றார். இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடை யின் பூட்டு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்கு மார் அதிர்ச்சிய டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சுமார் 20 ஆயிரம் மதிப்பு ள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீ சாருக்கு தகவல் தெரிவி த்தார். அங்கு வந்த போலீ சார் அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருவது, கடையில் இருந்த பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து இந்த பதிவு களை வைத்து திருடி ய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






