என் மலர்
ஈரோடு
- தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார்.
- சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு லட்சுமிகார்டன் சேரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 29). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கடந்த 21-ந் தேதி ரமேஷ்குமார் வெளியில் சென்று இருந்தார். அப்போது கிருஷ்ணவேணி மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.
அங்கு விளக்கு ஏற்ற முயன்றபோது அவர் அணிந்திருந்த நைட்டியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதை அவர் கவனிப்பதற்குள் நைட்டியில் மளமளவென தீ பரவியது.
இதனால் தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார். மேலும், தீயை அணைத்து கொள்வதற்காக அவரா கவே குளியல் அறைக்குள் சென்று தண்ணீரை ஊற்றி க்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர்.
தீயில் கருகிய கிருஷ்ணவேணி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமாரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
- சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தி யமங்கலம் சாலையில் ஜெயக்குமார் என்பவர் சி.சி.டி.வி. கடை நடத்தி வருகி றார். இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்கு மார் அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது சுமார் 20 ஆயிரம் மதிப்பு ள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவி த்தார். அங்கு வந்த போலீ சார் அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருவது, கடையில் இருந்த பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது.
இதையடுத்து இந்த பதிவுகளை வைத்து திருடிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் மற்றும் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்கள் குறித்து நாங்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்திற்கும் முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். அவரே நேரடியாக வந்து திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார்.
மத்திய அரசு சார்பில் மருத்துவமனை தர சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிதி கிடைக்கும். அதன் அடிப்படையில் இன்று ஈரோடு அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்ய வந்துள்ளோம். மருத்துவமனை அருகே பாலம் அமைக்கும் போது சர்வீஸ் சாலை அமைக்காமல் விட்டு விட்டார்கள்.
இப்போது சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்றால் மருத்துவமனை இடம் பாதிக்கப்படும். ஆனால் கண்டிப்பாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும், மதுபான விலை உயர்விற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மதுபான விலை உயர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.மேலும் அனைத்து மதுவிற்கும் விலை உயர்த்தவில்லை.எனவே இரண்டையும் தொடர்பு படுத்துவது சரியாக இருக்காது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் பெரும் பகுதியான வேலை முடிந்து விட்டது. திட்டத்தின் தொடக்க பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் சோதனையோட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் முடிக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்படும் தேதி ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மாலை தமிழக அமைச்சர்களின் சொத்து பட்டியலை தமிழக ஆளுநரிடம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,
அண்ணாமலை அவர் வேலையை செய்கிறார். அவர் என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்தால் எங்கள் வேலை கெட்டுபோய்விடும். எங்களுடைய வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
- கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் சேகர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (63). இவர் கோபி-சக்தி மெயின் ரோடு, கச்சேரிமேடு பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த சேகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற பிஸ்டல் துப்பாக்கியால் நெற்றி மீது தனக்குத்தானே சுட்டு கொண்டார்.
திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்த அவரது மகன், மனைவி அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த பார்த்தபோது சேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சேகரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேகர் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார் என தெரியவில்லை.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் சேகர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது.
உடனடியாக பவானிசாகர் வனச்சரகர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த புலியை நேரில் ஆய்வு செய்து மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து புலியை பிரேத பரிசோதனை செய்து புலியின் குடல் மற்றும் இரைப்பையை பெங்களூரு மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை. ஆய்வு முடிவு வந்த பிறகு தான் புலி எவ்வாறு இறந்தது என தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புலி உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் புலி இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என கூறினர்.
- பெருந்துறையில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது காரில் வேகமாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
- இருவரும்தான் இளம்பெண்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது என தெரியவந்தது.
பெருந்துறை:
மேற்கு வங்காளத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் பெருந்துறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது குழந்தையுடன் ஈரோடு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் அந்த இளம்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.
உடனே அவர்கள் மருந்துவமனைக்கு நாங்கள் அழைத்து செல்கிறோம் என கூறி அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றியுள்ளனர். காரில் ஏறிய அந்த பெண்ணிடம் எங்களுக்கு நிறைய பெரிய மனிதர்களை தெரியும். அவர்களுடன் நீ சந்தோசமாக இருந்தால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். உடனே அந்த இளம்பெண் தப்பித்து செல்ல முயன்றார். அப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளனர். உடனே இளம்பெண் கூச்சல் போட்டதில் அவர்கள் காரில் இருந்து தப்பி ஓடினர்.
பின்னர் இதுகுறித்து அந்த பெண் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறையில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது காரில் வேகமாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சித்தோடு பகுதியை சேர்ந்த வினோத் (35) என்பதும், பெருந்துறை அடுத்த ஜீவா செட் பகுதியை சேர்ந்த செல்லமுத்து (46) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும்தான் இளம்பெண்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது என தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சில்லரை விற்பனை 30 சதவீதம் வரை நடைபெற்றது.
- கடந்த வாரத்தை விட இந்த வாரம் மந்தமாகவே நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை கூடும். இது தவிர இதர நாட்களில் தினசரி சந்தையும் நடக்கிறது.
வாரந்தோறும் நடக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் கொள்முதல் செய்து செல்வர்.
இந்நிலையில் தமிழ் மாதம் ஆடி 18-ந் தேதியை ஆடிப்பெருக்காக தமிழக மக்கள் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபா ரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை விற்பனை 30 சதவீதம் வரை நடைபெற்றது.
ஆனால் அதே நேரம் கேரளா கர்நாடக ஆந்திரா போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.
இதனால் மொத்த வியாபாரம் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மந்தமாகவே நடந்தது. இன்று மொத்த வியாபாரம் 25 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.
காட்டன் சுடிதார், காட்டன் வேட்டி, சட்டைகள், சிறுவருக்கான காட்டன் சட்டைகள், பனியன் ஜட்டிகள் விற்பனை அமோகமாக இருந்தது.
- வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- வெளி மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனிராவுத்தர் குளம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களை ஏமாற்றி வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சவுந்தர் (24), பெரிய அக்ரஹாரம், கதவணை மின் நிலையம் பகுதியை சேர்ந்த உதயசந்திரன் (63), சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த பாலு (48) ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து எண்கள் எழுத்தப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.
- பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பில்லூர் அணையிலிருந்து உபரி நீராக 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹாடா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளட்டி, ஊதிக்குப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதி கிராம மக்கள் மாயற்றை கடந்து தான் வியாபாரம் மற்றும் வேலைக்கு செல்ல வேண்டும்.
இதேபோல் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் மாயாற்றக் கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து உள்ளதால் இப்போது மக்கள் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
ஏற்கனவே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடப்பதும் பரிசலில் செல்வதும் இருந்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் தொங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
- நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நித்யா (22).
இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான இருந்த நிந்யா நேற்று இரவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் உடனடியாக நம்பியூரில் இருந்து விரைந்து வந்தது. மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பரிசோதித்த பின்னர் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
108 ஆம்புலன்ஸ் கொன்னமடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நித்யாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும்-சேயும் பத்திரமாக கோபி செட்டி பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் நந்தகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- செம்மண் திட்டு எனும் பகுதியில் இரவில் மூங்கில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
- இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகள வில் பதிவாகி வந்தது. அதே நேரம் அருகில் உள்ள மாவட்டங்களான கோவை, சேலம் பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வந்தது. ஆனால் ஈரோட்டில் மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் சத்திய மங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சத்தியமங்கலம் அடுத்துள்ள செம்மண் திட்டு எனும் பகுதியில் இரவில் மூங்கில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று காலை சத்தியமங்கலம் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து இருந்த மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதன் பிறகு போக்குவரத்து சீரா னது.
- வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
- இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் ரவி-ரங்கநாயகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு தெரிந்த சிவக்குமார்-பிரவீனா ஆகியோர் தனது உறவினர் உதயகுமார் என்பவர் பவானியில் புதிதாக ஜவுளி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு பங்குதாரர்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்க உள்ளதாக ஆசை வார்த்தை கூறியு ள்ளனர்.இதனை நம்பிய தம்பதியினர், ரங்கநாயகிற்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை உதய குமா ரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பவானியில் விநாயகா இன்டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து ரங்கநாயகியின் சொத்து ஆவணங்களை சிவக்குமார், உதயகுமார், பிரவீனா மற்றும் 2 ஆகிய 5 பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
பின்னர் ரங்கநாயகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை யடுத்து போலீசார் தலைமறை வான 5 பேரையும் தேடி வந்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த மோசடிக்கு முக்கிய காரணமான சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






