search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy production work"

    • முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் பாசனம் பெறுகி ன்றன.

    விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை கொண்டு இரு பாசனங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இது குறித்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன சங்க தலைவர் சிபி தளபதி கூறியதாவது:

    கொடிவேரி அணை பாசனங்களுக்கு சித்திரை முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சித்திரையில் தண்ணீர் திறந்தாலும் வாய்க்கால் பராமரிப்பு பணியால் எதிர்பார்த்த மகசூல் இல்லை.

    ஆனால் நடப்பு முதல் போகம் எந்த இடையூறும் இன்றி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ கத்தில் நெல் உற்பத்தியில் கொடிவேரி அணை பாசனங்கள் முன்னிலையில் உள்ளது.

    நடப்பு போகத்தில் முறையான நீர் நிர்வாகத்தால் பருவத்தே பயிர் செய்ததால் ஏக்கருக்கு சராசரியாக 2500 கிலோ மகசூல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×