என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி, ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புதுப்பிக்கும் பணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கரட்டுப்பாளை யம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணி, மேட்டு நாசுவம்பாளையம் ஊரட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15-வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலு வலக கட்டிடம், கட்டப்பட்டு வருகிறது.

    லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசயி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.52 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள நாற்றுப்பண்ணை, தெற்கு தெருவில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள் மற்றும் மண க்காட்டூர் பகுதியில் ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வளர்ச்சி திட்ட ப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பு றங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் (பயிற்சி) பொன்மணி, வினய்குமார் மீனா, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி மற்றும் அலு வலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • வினாடிக்கு 7,208 கனஅடி நீர் வருகிறது
    • கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.52 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 7,208 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 82 அடியை நெருங்கி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.

    • ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறித்து யானை கரும்பை சுவைத்தது
    • இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தாளவாடி,

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும். வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.

    ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன. சுமார் 15 நிமிடத்திக்கு மேலாக சாலையை வழிமறைத்து கரும்பை சுவைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.52 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணைக்கு 7,208 கன அடி நீர்வரத்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.52 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

    அணைக்கு 7,208 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 82 அடியை நெருங்கி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.

    • கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் போரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 44). இவரது கணவர் பிரபாகரன் (51). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடி யில் பிரபாகரன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த நித்யா உடனே பிரபாகரனை ஆம்புலன்சில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அைழத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் பிரபா கரன் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து நித்யா கருங்க ல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் போரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவர் விஷம் குடித்து தற்கொலை

    • ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
    • இந்த கணக்கிற்கு இருப்புதொகை எதுவும் கிடையாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

    இந்த கணக்கிற்கு இருப்புதொகை எதுவும் கிடையாது. கலைஞர் மகளிர் உரிமைதொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களிலும் சிறப்பு சேவை மூலமும், தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

    இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அனுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன் நகரங்களில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

    கலைஞர் மகளிர் உரிமை த்தொகை பெறும் பயனாளி கள் மட்டு மி ல்லாமல் 100 நாள் வேலைத் திட்டபயனாளிகள், பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் முதியோர், மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மாவட்டத் திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெ ண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயனடை யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    • ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.
    • இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும். வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.

    ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன.

    சுமார் 15 நிமிடத்திக்கு மேலாக சாலையை வழிமறைத்து கரும்பை சுவைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • விளக்கேற்றிய போது தீயில் கருகி இளம்பெண் உயிரிழந்தார்
    • இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமாரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு,

    ஈரோடு லட்சுமிகார்டன் சேரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 29). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கடந்த 21-ந் தேதி ரமேஷ்குமார் வெளியில் சென்று இருந்தார். அப்போது கிருஷ்ணவேணி மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அங்கு விளக்கு ஏற்ற முயன்றபோது அவர் அணிந்திருந்த நைட்டியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதை அவர் கவனிப்பதற்குள் நைட்டியில் மளமளவென தீ பரவியது.

    இதனால் தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார். மேலும், தீயை அணைத்து கொள்வதற்காக அவரா கவே குளியல் அறைக்குள் சென்று தண்ணீரை ஊற்றி க்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். தீயில் கருகிய கிருஷ்ண வேணி உயிருக்கு போரா டிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளி க்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணவேணிக்கு திரும ணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமாரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பரிசோதனையில் பிரபாகரன் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது.
    • போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 44). இவரது கணவர் பிரபாகரன் (51). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடி யில் பிரபாகரன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த நித்யா உடனே பிரபாகரனை ஆம்புலன்சில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் பிரபாகரன் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து நித்யா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் போரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளியம்பட்டி அருகே சி.சி.டி.வி. கடையின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது
    • இதகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தி யமங்கலம் சாலையில் ஜெய க்குமார் என்பவர் சி.சி.டி.வி. கடை நடத்தி வருகி றார். இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடை யின் பூட்டு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு ஜெயக்கு மார் அதிர்ச்சிய டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சுமார் 20 ஆயிரம் மதிப்பு ள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீ சாருக்கு தகவல் தெரிவி த்தார். அங்கு வந்த போலீ சார் அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வருவது, கடையில் இருந்த பொருட்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து இந்த பதிவு களை வைத்து திருடி ய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    ×