என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பெருந்துறையில் மாவட்ட பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.
    • ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை தோற்று விக்கப்படவில்லை.

    பெருந்துறை:

    தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பெருந்துறையில் மாவட்ட பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் சங்க மாநில பொது ச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது:

    தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளி களில் 10 லட்சம் மாண வர்கள் சேர்க்கை நடை பெற்று உள்ளதாக கூறி யுள்ளது. இதற்கு ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை தோற்று விக்கப்படவில்லை.

    வகுப்பு அறைகளுக்கான நிதி ஒதுக்கீடும் இதுவரை நடைபெற வில்லை.உடனடியாக தமிழக அரசு இந்த பணியிடங்களை தோற்று விக்க வேண்டும்.

    அரசு பள்ளியை நம்பி வந்த மாணவர்களுக்கு தகுந்த கல்வி கிடைக்க அரசு பொற்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அதிகரித்து வருகிறது.

    ஒழுங்கீனமான மாண வர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இது போன்ற மாணவர்களை நெறிப்படுத்த ஆசிரியர்களுக்கு அரசு சில உரிமை களை கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளி யில் உள்ள ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை தவிர இதர பணிகளில் அதிக அளவில் பயன்படுத்த படுகிறார்கள்.அவற்றை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு பணி ப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். தேர்தல் நேர த்தில் அரசு ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது.

    இந்த நிலையை மாற்ற வரும் சட்டமன்ற கூட்டுத் தொடரில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் கடுமையான போராட்ட ங்களை முன் எடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் பவானிசாகர் சாலை வழியாக சென்றது. இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    தமிழ்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கு மற்றும் தாய்மார்களின் நல் வாழ்வி ற்கும் குழந்தைகளின் ஒளி மயமான எதிர்கா லத்திற்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது முதல் குழந்தையை தாம தப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள் எடுத்துரைக்கப் பட்டன.

    மக்கள் தொகை பெருக்க த்தினால் ஏற்படும் தாக்க த்தை குறைத்தல், சுற்று ச்சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்கு வித்தல், வறுமை ஒழிப்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறப்பட்டது.

    குடும்பத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணி த்துக் கொள்வேன் என உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவ- மாணவிகள் ஏற்றனர்.

    மேலும் என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றி யடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என சுதந்திர அமுத பெரு விழாவினை கொண்டாடி மகிழ்வோம் மற்றும் குடும்ப நல உறுதிமொழி ஏற்று வளம் பெறுவோம் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஊர்வ லமாக சென்று பள்ளியை வந்து அடைந்தனர்.

    • கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விநாயகர், பாலமுருகன் மற்றும் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் 500 லிட்டர் கூழ் தயார் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார மகாதீபாரதனை பூஜை நடைபெற்றது.

    இந்த பூஜையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கூழ் பிரசாதம் பெற்று சென்றனர்.

    • கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.56 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை அணைக்கு 4,197 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் இன்று 200 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
    • பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சீனிவாசன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கோழிப்பண்ணையில் ஒவ்வொரு நாளும் கோழி குஞ்சுகள், முட்டைகள் காணாமல் போய் கொண்டிருந்திருக்கிறது. அவரும் அதை கவனிக்கவில்லை. கீரி அல்லது நாய்கள் எடுத்திருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு சட்டை உரித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார். யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது விறகு அடியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறிக்கொண்டு வெளியே வந்தது. அதனை லாபகரமாக மீட்ட யுவராஜ் இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறினார். மேலும் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.

    தற்போது குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

    • காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலையும் சரிய தொடங்கியது.
    • உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை மெது மெதுவாக குறைய தொடங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம். திருப்பூர், தாளவாடி பெங்களூரு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பாளையம், தாளவாடி, ஆந்திரா, காங்கேயம் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.140 வரை உயர்ந்தது.

    இதேபோல் கருப்பு அவரை பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. இதைப்போல் சின்ன வெங்காயம் வரத்து அடியோடு சரிந்ததால் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது. முக்கியமான காய்கறி விலை உயர்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் மீண்டும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலையும் சரிய தொடங்கியது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதியில் இருந்து 105 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் இன்று காய்கறிகள் விலை சற்று குறைந்து இருந்தது.

    குறிப்பாக கடந்த வாரம் ரூ. 120-க்கு விற்ற கருப்பு அவரை இன்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதேப்போல் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80 க்கு விற்பனையானது.

    உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை மெது மெதுவாக குறைய தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 120-ஆக இருந்த சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ. 100-ஆக குறைந்துள்ளது.

    இதேப்போல் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 100-க்கு மேல் இருந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.75 ஆக குறைந்துள்ளது. குடைமிளகாவும் ஒரு கிலோ ரூ.90 ஆக குறைந்துள்ளது.

    வ.உ.சி.மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கத்திரிக்காய்-70, வெண்டைக்காய்-35, முள்ளங்கி-20, பாகற் காய்-60, பீர்க்கங்காய்-50, புடலங்காய்-40, சவ்சவ்-15, முருங்கைக்காய்-40,

    பட்ட அவரை-50, கேரட்-65, பீட்ரூட்-60, முட்டை கோஸ்-25, காலிப் பிளவர்-40, உருளைக்கிழங்கு-40, பெரிய வெங்காயம்-35, பழைய இஞ்சி-300, புதிய இஞ்சி-175.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.26 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணைக்கு 5,821 கன அடி நீர்வரத்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.26 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

    அணைக்கு 5,821 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடைமுறை கூலியில் இருந்து 26 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    ஈரோடு:

    ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன், ஈரோடு ரெகுலர் லாரி சர்வீஸ் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இவர்களுக்கு 6 ஆண்டாக கூலி உயர்வு வழங்காததால் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கால வரையற்ற வேலை நிறுத்த த்தில் சுமை தூக்கும் தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீ ர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி சுமைதூக்கும் தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அந்த குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் இரு தரப்புக்கும் பாதிப்பின்றி கூலி உயர்வு வழங்கப்படும் என உறுதி யளித்தார்.

    இதன்பேரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் கூட்டு டிரான்ஸ்போர்ட் அசோசியேசன், ரெகுலர் லாரி சர்வீஸ் அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் பிங்களன், செந்தில்ராஜா, கார்த்தியும், தொழி லாளர்கள் சார்பில் முன்னா ள் எம்.எல்.ஏ தென்னரசு, பெரியார் நகர் மனோகரன், எல்பி.எப். தங்கமுத்து, கோபால், சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜா உள்பட பலர் பங்கேற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தில் பணி செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடைமுறை கூலியில் இருந்து 26 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    ஈரோடு ரெகுலர் சர்வீஸில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 21 சதவீத கூலி உயர்வு வழங்குவது என்றும் உறுதி செய்யப்பட்டது. பிற வேலைகளுக்கு புதிய கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    புதிய கூலி உயர்வு வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 2026 ஜூலை மாதம் 30-ந் தேதி வரையிலான 3 ஆண்டுகள் அமலில் இரு க்கும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

    • ஆண்கள் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நடை பெற்றது.
    • புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நடை பெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி கலந்து கொண்டார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:

    தமிழக முதல்-அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறைக்கு பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் ஆசியக் கோப்பை க்கான ஆண்கள் ஆக்கி போட்டிகள் வருகின்ற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடை பெற உள்ளது.

    இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் கலந்து கொள்கிறது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு வழங்க ப்படும் பரிசுக்கோப்பை தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று பொது மக்கள் பார்வைக்கு அறி முகம் செய்யப்பட்டு வரு கிறது.

    மேலும் இந்த நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    மாவட்டங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வரு கிறது. அதன்படி புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் கோப்பை அறிமுக விழா நடந்தது.

    மேலும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஆக்கி போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்தியா அணியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த கார்த்தி கலந்து கொள்கிறார்.

    இந்த ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் விைளயாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.

    மேலும் மாணவர்கள் படிப்பதுடன் விளையா ட்டிலும் கவனம் செலுத்தி னால் உடலும் ஆரோக்கியம் பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மாவட்டத்தி ற்கும், மாநிலத்திற்கும் மற்றும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் தலைமையில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புன்செய்புளி யம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழி யாக புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார், சத்தியமங்கலம் வருவாய் தாசில்தார் சங்கர்கணேஷ், புன்செய்புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த னன், துணைத்தலைவர் சிதம்பரம், ஆணையாளர் (பொறுப்பு) செல்வம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுத்தை நடமாட்டம் கேமராவில் உறுதி செய்யப்பட்டது.
    • சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே யுள்ள கொங்கர்பாளையம் அடுத்த வெள்ளக்கரடு பகுதியில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கடித்து கொன்றது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வன த்துறைனியர் சிறுத்தையை கண்காணிக்க 5 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிறுத்தை நடமாட்டம் கேமராவில் உறுதி செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் சார்பில் கால்நடைகளை வேட்டை யாடி வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழை க்கப்பட்டு உள்ளே இறைச்சி யும் வைக்கப்பட்டு தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்ற னர்.

    • நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.
    • தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பூசாரி காளியப்பன் (வயது 52). கூலித் தொழிலாளியன இவர் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் முளைத்திருக்கும் நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.

    இந்த நாணல் தட்டுகள் கட்டைப்பை தயாரிக்கவும், தக்காளி நாற்றுகள் சாயாமல் இருப்பதற்கும், வெற்றிலை கொடி தலைவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. 200 குச்சிகள் கொண்ட ஒரு கட்டின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் 700 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

    தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.

    மேலும் இதுகுறித்து கூளித்தொழிலாளியான பூசாரி காளியப்பன் கூறுகையில்,

    நாணல் தட்டுகளை ஓடைகளில் பறிக்கும் ேபாது அந்த பகுதிகளில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகளவில் இருக்கும்.

    அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய கட்டுகளாக கட்டி தலையில் சுமந்தபடி அங்கிருந்து கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிடைக்கும் இந்த விலை உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை.

    மேலும் வாரத்தில் 3 அல்லது 4 நான்கு கட்டுகள் மட்டுமே விற்பதால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

    • கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் போலீசாருக்கு கிட்ட ப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்கள் சம்பந்த மான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    முகாமில் கோபி உட்கோட்டத்துக்கு உட்பட்ட கோபி, சிறுவலூர், கவுந்தப்பாடி,நம்பியூர்,கடத்தூர், வரப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்ட ர்கள். ஏட்டுகள், இரண்டாம் நிலை, முதல் நிலை போலீ சார், போக்குவரத்து போலீ சார் என ஏராளமனோர் கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் ஈரோடு டாக்டர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.

    ×