search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wage hike for heavy lifters"

    • அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடைமுறை கூலியில் இருந்து 26 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    ஈரோடு:

    ஈரோடு கூட்ஸ் டிரா ன்ஸ்போர்ட் அசோசியேசன், ஈரோடு ரெகுலர் லாரி சர்வீஸ் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இவர்களுக்கு 6 ஆண்டாக கூலி உயர்வு வழங்காததால் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கால வரையற்ற வேலை நிறுத்த த்தில் சுமை தூக்கும் தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீ ர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி சுமைதூக்கும் தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அந்த குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் இரு தரப்புக்கும் பாதிப்பின்றி கூலி உயர்வு வழங்கப்படும் என உறுதி யளித்தார்.

    இதன்பேரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் கூட்டு டிரான்ஸ்போர்ட் அசோசியேசன், ரெகுலர் லாரி சர்வீஸ் அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் பிங்களன், செந்தில்ராஜா, கார்த்தியும், தொழி லாளர்கள் சார்பில் முன்னா ள் எம்.எல்.ஏ தென்னரசு, பெரியார் நகர் மனோகரன், எல்பி.எப். தங்கமுத்து, கோபால், சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜா உள்பட பலர் பங்கேற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தில் பணி செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நடைமுறை கூலியில் இருந்து 26 சதவீதம் உயர்த்தி வழங்குவது.

    ஈரோடு ரெகுலர் சர்வீஸில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 21 சதவீத கூலி உயர்வு வழங்குவது என்றும் உறுதி செய்யப்பட்டது. பிற வேலைகளுக்கு புதிய கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    புதிய கூலி உயர்வு வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 2026 ஜூலை மாதம் 30-ந் தேதி வரையிலான 3 ஆண்டுகள் அமலில் இரு க்கும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

    ×