என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

     ஈரோடு:

    நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சார்ந்த 3093 மாணவ- மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம்வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

    மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்விஉதவித்தொகை வழங்கப்படும். தேசிய த்தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்12-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு வரும 29.09.2023 அன்று நடை பெறும்.

    விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணை க்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணைய தளங்களில் வெளியிட ப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர்.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி மாத 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டு அம்மனை வழிபட்டனர்.

    அந்தியூருக்கு காவல் தெய்வமாக விளங்கும் பத்ரகாளியம்மன் வழிபட்டு சென்றால் அனைத்து செயல்களும் நன்மையில் முடியும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் தொடங்கியது முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இதில் குறிப்பாக ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு காய், கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இன்று மாலை விஷ்ணு துர்க்கை வழிபாட்டு குழுவினர்விளக்கு பூஜை நடைபெறு உள்ளது..

    பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் உள்ள மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடக்கிறது.

    இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் மணிக்கூண்டு கொங்காலம்மன் கோவிலில் காலை வியாபாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அங்காரம் செய்ய ப்பட்ட சிறப்பு அங்காரம் செய்யபப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் ஈரோடு காரை வாய்க் கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரிய ம்மன், சூரம்பட்டி மாரி யம்மன், பார்க் ரோடு எல்லை மாரிய ம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சைபர் கிரைம் போலீசார் சந்தேக நபரின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.5 லட்சத்தை மீட்டனர்.
    • குறுஞ்செய்திகளை நம்பி எந்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேட்டைகாரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.

    இந்நிலையில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் கடந்த மாதம் 15-ந் தேதி பாலசுப்பிரமணியத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

    அப்போது அந்த நபர் தன்னை ஏ.டி.எஸ். டிரேடிங் ஷேர் புரோக்கர் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெற்று தருவதாக உத்தி ரவாதம் அளித்துள்ளார்.

    இதனை உண்மை என நம்பிய பாலசுப்பிரமணியம் அந்த நபர் அளித்த வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சம் வரை தன் வங்கி கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார்.

    பணத்தை பெற்ற சில நாளில் அந்த மர்மநபரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியம் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்து, ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் அளித்தார்.

    இந்த புகாரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சந்தேக நபரின் வங்கி கணக்கினை முடக்கி, பாலசுப்பிரமணியத்தின் ரூ.5 லட்சத்தை மீட்டனர்.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி ராஜேந்திரன் முன்னிலையில் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பாலசுப்பிரமணியத்திடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறுகையில், ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்ட உடனடி யாகவோ அல்லது 24 மணி நேரத்திற்குள்ளகாவோ சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கு ம்பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டு தரப்படும்.

    பொதுமக்கள் அடை யாளம் தெரியாத நபர்களி டம் இருந்து அல்லது தெரி யாத செல்போன் எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டாம். ஆன்லை னில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து விட வேண்டாம் என்றார்.

    • பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
    • யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றனர்.

    பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினை குடிப்பதற்காக வனவிலங்குகள் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வருவது உண்டு. அதில் குறிப்பாக யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சாலைகளிலும், அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளிலும் ஒற்றை யானையை சுற்றி திரிந்து வருகின்றது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், யானையை பார்த்தவுடன் செல்பி எடுப்பது, செல்போனில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவத்தினால் வன விலங்குகள் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், வாகனத்தை சேதப்படுத்துவதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    • வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
    • வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை, மான், யானை, புலி போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகி ன்றன.

    இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமர ஹாடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வனப்பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

    இந்த நிலையில் உடற்கூறு ஆய்வின் முடிவில் புலி வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்னிகளை வேட்டையாட வைத்துள்ள இரும்பு கம்பியால் ஆன கன்னியில் புலி சிக்கியதால் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலும், உணவில்லாமலும் புலி இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுசில் குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாச்சிமுத்து, பத்மகுமார், லோகேஷ் பால், தினகரன், சௌந்தர்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வனப்பகுதிகளில் பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாட அவ்வப்போது இரும்பு கம்பியால் ஆன கன்னிகளை வைத்து வந்தது தெரிய வந்தது.

    இவர்கள் வைத்த கன்னியில் புலி சிக்கி இறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிர் தண்ணீரில் மூழ்கியது.
    • 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயர்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35 முதல் 40 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 80 கிலோ). இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சுமார் 3 லட்சம் மூட்டைகள் ஈரோடு சுற்றுவட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவை.

    இந்தியாவைப் பொருத்தவரை தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. அதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள் நிறமி (குர்குமின்) அளவு அதிகம். 3 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.

    இருமுறை பாலிஷ் செய்ய முடியும். பொன் நிறம், மஞ்சள் நிறம், வெளிர் பொன் நிறம் உள்ளிட்ட அனைத்து நிற மஞ்சள்களும் ஈரோட்டில் கிடைக்கும் என்பதால் இந்திய மஞ்சள் சந்தை விலை நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் சந்தையாக ஈரோடு சந்தை இருந்தது.

    தெலுங்கானா மாநிலத்துக்கு அடுத்து ஈரோட்டில்தான் மஞ்சள் ஏலம் அதிக அளவில் நடைபெறும். நாட்டிலேயே அதிக அளவில் மஞ்சள் விளையும் இடத்திலும், ஏலம் நடைபெறும் இடத்திலும் ஈரோடு இரண்டாம் இடத்தை வகித்து வந்தது. நீர்ப்பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஈரோட்டில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறையத் துவங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் 2015 இல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016 இல் 2,966 ஹெக்டேராக குறைந்தது, 2017 இல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018 இல் 5,625 ஹெக்டேராகவும், 2019 இல் 4,319 ஹெக்டேராகவும், 2020 இல் 4,100 ஹெக்டேராகவும், 2020 இல் 3,900 ஹெக்டேராகவும், 2021 இல் 3,850 ஹெக்டேராகவும், 2022 இல் 3,600 ஹெக்டேராகவும், 2023 இல் 3,500 ஹெக்டேராகவும் குறைந்துவிட்டது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த ஆண்டு அங்குள்ள சந்தைகளுக்கு தரமான மஞ்சள் வரவில்லை. இதனையடுத்து ஈரோடு மஞ்சளுக்கு தேவை அதிகரித்து இப்போது குவிண்டால் ரூ.13,000க்கும் மேல் விற்பனையாகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் மூட்டை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்படும் மஞ்சள் பூச்சி தாக்குதலால் தரம் குறைந்து விடுகிறது. இதனை தவிர்க்க, அரசு நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்பு மூலமாகவே குளிர்சாதன வசதி உள்ள மஞ்சள் சேமிப்புக் கிடங்குகளை ஈரோடு மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும் குளிர்சாதன மஞ்சள் சேமிப்புக் கிடங்கு அமைக்க முன்வரும் தனியாருக்கு மின்சார மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயர்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மஞ்சள் சாகுபடிக்கு தகுதியான நிலங்களில் ஏற்கனவே கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்துள்ளதால் மஞ்சள் சாகுபடி செய்ய இயலாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திலேயே அறுவடை முடிந்து மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டதால் விதை மஞ்சள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் நிலையான மஞ்சள் சாகுபடி தொடர மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • இதில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம்-கோவை செல்லக்கூடிய பிரதான சாலையில் அதிகாலை 3 மணி அளவில் ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி மண் ஏற்றி சென்ற லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது பொறிக்கடை கார்னர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி வீட்டின் முன்பகுதியில் மோதி நின்றது. இதில் வேலூரை சேர்ந்த டிரைவர் துரையன் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுத்து சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் இன்று காலை பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மேலும் இதே பகுதியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் தடுப்பு சுவரில் மோதி நிற்பது தொடர்கதையாகவே உள்ளது.

    எனவே இந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். இல்லை யென்றால் ஒளிரும் லைட்டை சாலையில் பதித்து வளைவு பகுதி என்று எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும்.

    சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கும், துறை சார்ந்த அதிகாரி களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.
    • விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள கைலாநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா வினை முன்னிட்டு விசேஷ அபிேஷகம், அல ங்கார பூஜைகள் மற்றும் 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.

    பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் சிவசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். விழாவில் சுந்தரமூ ர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடும் சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாய ன்மார்களை வழிபட்டனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடைக்குள் புகுந்து திருடிய நபர் தாமரைச்செல்வன் என தெரிய வந்தது.
    • புளியம்பட்டி போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து அவர் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புளியம்பட்டி:

    புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கோவை-சத்தியமங்கலம் சாலையில் சி.சி.டி.வி. கேமிரா விற்பனை கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் வேலை செய்யும் கண்ணதாசன் என்பவர் கடந்த 23-ந் தேதி இரவு கடை கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.

    அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் கேமிரா பொருத்த பயன்படுத்தப் படும் உபகரணங்கள் அடங்கிய 2 பெட்டிகளை திருடி சென்றார்.

    இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. கடை உரிமையாளர் ஜெயக்குமார் புகாரின்படி புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான நபர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது கடைக்குள் புகுந்து திருடிய நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வாங்கினாங்கோம்பை பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் (28) என தெரிய வந்தது. இவர் சரக்கு வாகன ஓட்டுனர்.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து அவர் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    • மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்ச ரகத்தில் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மனித வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    மைசூர் சாலையில் தொடங்கிய பேரணி வனச்சரக அலுவலகத்தில் முடிந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும் வனத்தை பாதுகாப்பது பற்றியும் கோசங்கள் எழுப்பியவாரு சென்றனர்.

    பின்னர் பள்ளி வவள காத்தில் விழிப்பு ணர்வு முகாம் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெ ற்றது.

    இதில் ஒய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் சதாசிவம், கிருஷ்ணகுமார், நந்தகுமார், கவுசல்யா, ஊராட்சி தலைவர் சித்ரா சுப்பிர மணியம், வனச்சரக அலு வலர் பாண்டிராஜ், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் மணி கண்டன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் பாலபிஷேக பெருவிழா இன்று கோலகலமாக நடைபெற்றது.
    • பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்க ப்படுகிறார்.

    சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியர்க்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 56-வது ஆண்டு பாலபிஷேக பெருவிழா இன்று கோலகலமாக நடைபெற்றது.

    காலை 8.10 மணிக்கு 1210 திருப்பாற் குடங்கள் உரிய சிறப்புடன் சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேள, தாளம் முழங்க சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக சென்றடைந்தது.

    காலை 10 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியர்க்கு பால் அபிஷேகம் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் பால் குடங்களில் இருந்த பால்களை வேத மந்திரங்கள் ஓத சுப்பிரமணிய பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இதை ஏரளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர்.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாரா தனையும் அதையடுத்து மதியம் உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அ ன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்சியால் அதிகாலை முதலே சென்னிமலை முருகன்கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. பாலாபிஷேக பெருவிழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
    • இதில் மொத்தம் 74 பேருக்கு வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக காவல் துறையில் எவ்வித புகார், தண்டனையின்றி சிறப்பாக பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதில் மொத்தம் 74 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 7 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக தலா ரூ.25 ஆயிரமும், 3 பேருக்கு ஈமச்சடங்கு தொகையாக தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    ×