என் மலர்
நீங்கள் தேடியது "போலீசாருக்கான மருத்துவ முகாம்"
- போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் இன்று காலை தொடங்கியது.
- முகாமில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் இன்று காலை ஈரோடு செங்குந்தர் ஆண்கள் பள்ளியில் தொடங்கியது.
இம்முகாமினை ஈரோடு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜவகர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
முகாமில் ரத்த அழுத்தம், இதயக்கோளாறு, சர்க்கரை பாதிப்பு, கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் ஏராமளான போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் தொழிலதிபர் அக்னி சின்னசாமி, டாக்டர்.சகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






