10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

ஆர்த்தி வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சித்தோடு போலீசார் தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

பவானி:

பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பாரதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது மூத்த மகள் ஆர்த்தி (14). இவர் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆர்த்தி டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு வந்து சென்னை யில் இருந்து ஊர் திரும்பிய தனது தாயுடன் இரவு சுமார் 9.45 மணியளவில் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

பின்னர் ஆர்த்தி வீட்டில் பாட்டி மற்றும் தம்பி ஆகியோர் இருந்த நிலையில் சமையல் அறையில் ஓட்டு மர சட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மாணவி ஆர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com