என் மலர்
நீங்கள் தேடியது "for the benefit of the world"
- சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
- மங்கள மஹா நவசண்டியாக யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கப்படுகிறது.
அன்று மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது.
11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.
- முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் தொடங்கியது.
- சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் காலை 8.30 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடந்தது.
மறுநாள் காலை 8 விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனையுடன் மாலை நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.






