என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணத்தை இழக்க வேண்டாம்"

    • சைபர் கிரைம் போலீசார் சந்தேக நபரின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.5 லட்சத்தை மீட்டனர்.
    • குறுஞ்செய்திகளை நம்பி எந்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேட்டைகாரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.

    இந்நிலையில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் கடந்த மாதம் 15-ந் தேதி பாலசுப்பிரமணியத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

    அப்போது அந்த நபர் தன்னை ஏ.டி.எஸ். டிரேடிங் ஷேர் புரோக்கர் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெற்று தருவதாக உத்தி ரவாதம் அளித்துள்ளார்.

    இதனை உண்மை என நம்பிய பாலசுப்பிரமணியம் அந்த நபர் அளித்த வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சம் வரை தன் வங்கி கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார்.

    பணத்தை பெற்ற சில நாளில் அந்த மர்மநபரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியம் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்து, ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் அளித்தார்.

    இந்த புகாரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சந்தேக நபரின் வங்கி கணக்கினை முடக்கி, பாலசுப்பிரமணியத்தின் ரூ.5 லட்சத்தை மீட்டனர்.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி ராஜேந்திரன் முன்னிலையில் மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பாலசுப்பிரமணியத்திடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறுகையில், ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்ட உடனடி யாகவோ அல்லது 24 மணி நேரத்திற்குள்ளகாவோ சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கு ம்பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டு தரப்படும்.

    பொதுமக்கள் அடை யாளம் தெரியாத நபர்களி டம் இருந்து அல்லது தெரி யாத செல்போன் எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டாம். ஆன்லை னில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து விட வேண்டாம் என்றார்.

    ×