என் மலர்
நீங்கள் தேடியது "their excellent work"
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
- இதில் மொத்தம் 74 பேருக்கு வழங்கப்பட்டது.
ஈரோடு:
தமிழக காவல் துறையில் எவ்வித புகார், தண்டனையின்றி சிறப்பாக பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில் மொத்தம் 74 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 7 பேருக்கு மருத்துவ நிவாரண தொகையாக தலா ரூ.25 ஆயிரமும், 3 பேருக்கு ஈமச்சடங்கு தொகையாக தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.






