மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

 ஈரோடு:

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சார்ந்த 3093 மாணவ- மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம்வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்விஉதவித்தொகை வழங்கப்படும். தேசிய த்தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கு 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்12-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு வரும 29.09.2023 அன்று நடை பெறும்.

விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணை க்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணைய தளங்களில் வெளியிட ப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com