search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modern sugarcane cultivation"

    • கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். இதில், விதைச் சான்று அலுவலர் நாசர் அலி, உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் பங்கேற்று, அரசு துறை சார்ந்த மானிய திட்டங்கள், சந்தேகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மானியம், ஒரு பருகரணை நடுவதால் ஏற்படும் நன்மைகள், இயந்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், நீர் மற்றும் உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    வட்டாரத் திட்ட மேலாளர் பிரபாகரன், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.

    உதவித் திட்ட மேலாளர் தியாகராஜன் சிறுதானியத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். விதை சான்று அலுவலர் நாசர் அலி, விதைப்பண்ணை அமைத்தல், விதை தேர்வு, ரகங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×