search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of small onion has decreased in"

    • சின்ன வெங்காயம் விலை அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இன்று விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

    ஏற்கனவே கத்திரிக்காய், பீன்ஸ், இஞ்சி, தக்காளி விலைகள் அதிகரித்து வந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    வெங்காயத்தை பொறுத்தவரை தாளவாடி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் மார்க் கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவு சின்ன வெங்காயம் வரத்தானதால் விலை சரிய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாகி வந்தது.

    இந்த நிலையில் இன்று மேலும் விலை குறைந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது. இன்னும் சில நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    ×