என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.1 Crore 55 Lakhs"

    • ஏலத்துக்கு மொத்தம் 4,120 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சம் ஆகும்.

    ஈரோடு:

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 4,120 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்பரைகள் 2,416 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.

    இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 73.89க்கும், அதிகபட்சமாக ரூ. 82.00க்கும் விற்பனையாகின.இரண்டாம் தரக் கொப்பரைகள் 1,704 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 08.99க்கும், அதிகபட்சமாக ரூ. 77.18க்கும் விற்பனையாகின.மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.

    இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 55 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    ×