என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பியூர் தீயணைப்பு துறையினர்"

    • கிணற்றுக்குள் பழனிச்சாமி பாறை இடுக்குகளில் உயிருக்கு போராடி கொண்டு இருப்பது தெரிந்தது.
    • நம்பியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கயிறு மூலமாக உயிருடன் மீட்டனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65) கூலி வேலை செய்து வரு கிறார். பழனிச்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கநாதபுரம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.ஆள் நடமாட்டடம் இல்லாத பகுதி என்பதால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

    இதனால் ஞாயிற்று கிழமை மதியம் முதல் செவ்வாய் மதியம் வரை கிணற்றுக்குள்ளேயே கிடந்துள்ளார்.

    இதற்கிடையே 2 நாட்களாக பழனிச்சாமியின் உறவினர்கள் பல இடங்களி லும் தேடினர் கிடைக்க வில்லை.

    இந்நிலையில் கிணற்றின் அருகே சிலர் கால்நடை களை மேய்த்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்கவே கிணற்றுக்குள் பார்த்த போது பழனிச்சாமி பாறை இடுக்குகளில் அமர்ந்தும், கயிற்றை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நம்பியூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் நம்பியூர் போலீசார் கிணற்றுக்குள் விழுந்து கிடந்த பழனிச்சாமியை கயிறு மூலமாக உயிருடன் மீட்டனர்.

    அதை தொடர்ந்து மீட்கப்பட்ட பழனிச்சாமியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×