search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasted sugarcane"

    • ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.
    • இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும். வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.

    ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன.

    சுமார் 15 நிமிடத்திக்கு மேலாக சாலையை வழிமறைத்து கரும்பை சுவைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.
    • இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.

    தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரியில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்று செல்லும் லாரிகளை ஒற்றை அணைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்பு கட்டிகளை ருசித்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.

    இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது.

    இதனால் மற்ற வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் கழித்து யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடர்ந்தது.

    ×