லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த ஒற்றை யானை

காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.
லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த ஒற்றை யானை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.

தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரியில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்று செல்லும் லாரிகளை ஒற்றை அணைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்பு கட்டிகளை ருசித்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்றபோது திடீரென ஒரு காட்டு யானை லாரியை வழிமறைத்தது.

இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றது.

இதனால் மற்ற வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் கழித்து யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடர்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com