search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Webbly"

    • விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    • விவசாயிகள் கரும்புக்கு பதிலாக வாழை பயிரிட்டு வருகின்றனர்.
    • திங்கட்கிழமை தோறும் வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலியில் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கி ழமை ஈரோடு வேளாண் விற்பனைக்குழு மூலம் தேங்காய்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    சென்னிமலை பகுதியில் முன்பு விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு வந்தனர்.

    ஆனால் கரும்பு வெட்டுக்கூலி அதிகரிப்பு மற்றும் ஆலைகளில் பணம் பெறுவதில் தாமதம் என பல காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் கரும்புக்கு பதிலாக வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    ஆனால் வாழைத்தாருக்கு போதுமான விலை கிடைக்க வேளாண்மை துறை மூலம் ஏலம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் விவசாயி களின் கோரிக்கை ஏற்று வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறும் என ஈரோடு வேளாண் விற்பனை குழு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த ஏலத்திற்கு அனைத்து ரக வாழைத்தார்களையும் விவசாயிகள் கொண்டு வரலாம் என்றும்,

    ஏலத்தில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வருவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் விற்பனைக்குழு அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 ஆயிரத்து 257 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 52 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    சென்னிமலைல்:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 701 தேங்கா ய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 79 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 257 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 52 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    ×