search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெங்குமரஹாடா மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    தெங்குமரஹாடா மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.
    • பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இந்நிலையில் கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை பில்லூர் அணையிலிருந்து உபரி நீராக 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹாடா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கள்ளட்டி, ஊதிக்குப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதி கிராம மக்கள் மாயற்றை கடந்து தான் வியாபாரம் மற்றும் வேலைக்கு செல்ல வேண்டும்.

    இதேபோல் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் மாயாற்றக் கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து உள்ளதால் இப்போது மக்கள் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

    ஏற்கனவே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடப்பதும் பரிசலில் செல்வதும் இருந்து வருகின்றனர்.

    இதனால் இந்த பகுதியில் தொங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×