என் மலர்
நீங்கள் தேடியது "Daughter sets herself on fire in the"
- சிவசங்கரி தனக்கு தானே உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே புது அண்ணாமலைபாளை யத்தை சேர்ந்தவர் மதிய ழகன் (வயது 68). இவரது மகள் சிவசங்கரி திரும ணமான 2 வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வந்து தந்தை மதியழகனுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலை யில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதியழகனின் மனைவி மல்லிகா இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சிவசங்கரி தனக்கு தானே உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இதுகுறித்து சிவகிரி காவல் நிலைய த்திற்கு தகவல் தெரிவி க்கபட்டது. இதையடுத்து போலீசார் சிவசங்கரி உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து மதியழகன் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






