பாம்பு கடித்து மூதாட்டி பரிதாப சாவு

கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பாம்பு கடித்து மூதாட்டி பரிதாப சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், நசியனூரை அடுத்துள்ள முள்ளம்பட்டி, இச்சிவலசு பகுதியைச் சேர்ந்தவர் நாகதேவி (63). இவரது கணவர் கடந்த 13 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் உமாசங்கர் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

உமா சங்கர் மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகதேவி கடந்த 3 மாதங்களாக திங்களூர் அருகே உள்ள சின்னவீர சங்கிலி, அய்யன்காட்டுத் தோட்டம் பகுதியில் உள்ள கால் நடை மருத்துவர் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், வீட்டின் பின்புறம் கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.

உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியி லேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com