என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    பழனி:

    பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (4-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கரைப்பட்டி, கீரனூர், கொழுமம்கொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.
    • பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ளது அணைப்பட்டி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மசமுத்திரம் குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சுற்றுவட்டார கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. இந்த குளத்தில் வருடந்தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.

    இந்நிலையில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பிரம்மசமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவர் பழனிசாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் அணைப்பட்டி, கொட்டப்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அனமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், பாலம் ராஜாபட்டி, குட்டத்துப்பட்டி, கோமையன்பட்டி, புகையிலை பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும், கூடைகளை பயன்படுத்தி மீன்களை உற்சாகமாக அள்ளி சென்றனர். கட்லா, ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீன்கள் வலையில் சிக்கியது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொன் முருகன் கூறுகையில், பிரம்ம சமுத்திரகுளம் மூலம் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதை வரவேற்கும் வகையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாரம்பரியமாக மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. 18 பட்டி சுற்றுவட்டாரத்திலிருந்து ஜாதி, மத பேதமின்றி அனைவரும் இதில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டனர் என்றார். 

    • வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது.
    • குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிபுதூர், ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(21-ந் தேதி) நடைபெற இருப்பதால் அய்யர் மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி,

    மினுக்கம்பட்டி, வி. புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிபுதூர், ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேடசந்தூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது.
    • கட்டக்காடு, வெள்ளரிக்கரை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, எம். வாடிப்பட்டி, முத்துலாபுரம், கணேசபுரம், கதிர் நாயக்கன்பட்டி. கே.சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, போடிக்காமன்வாடி, நெல்லூர், குப்பிநாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம் காலனி,

    நெல்லூர் காலனி, பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கட்டக்காடு, வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்.
    • விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்.

    பராமரிப்பு பணிக்காக வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களக்கு பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியே மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சிறுவனால் மேலே வரமுடியாமல் உள்ளே மூழ்கினான்.
    • வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என காயத்ரி தேடினார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி (25). இவர்கள் 2 பேரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாரா ஸ்ரீ (8) என்ற மகளும், துரைப்பாண்டி (2) என்ற மகனும் உள்ளனர்.

    இன்று முனியப்பன் வியாபாரத்திற்காக வெளியில் சென்று விட்டார். வீட்டில் காயத்திரி தனது குழந்தைகளுடன் இருந்து வந்தார். அப்பொழுது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துரைப்பாண்டி அங்கிருந்த தண்ணீர் நிரப்பி இருந்த அண்டாவிற்குள் தவறி தலைகீழாக விழுந்தான். இதனால் சிறுவனால் மேலே வரமுடியாமல் உள்ளே மூழ்கினான்.

    வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என காயத்ரி தேடினார். அருகில் உள்ள உறவினர்கள் வீடு உள்பட அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் எதேச்சையாக அண்டாவில் பார்த்த பொழுது கால் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளான். உடனடியாக அவனை மீட்ட உறவினர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    • வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது.
    • ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தை பார்த்த பயணிகள் அச்சமடைந்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை அருகே வந்தே பாரத் ரெயில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குளாகினர்.

    நேற்று கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்று தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவரில் 178 ரன்களை எடுத்தது.

    திண்டுக்கல்:

    9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். ஜெகதீசன் 81 ரன்னிலும், பாபா அபராஜித் 67 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியின் விமல்குமார் அதிரடியாக ஆடினார். சிக்சர்களைப் பறக்கவிட்டார்.

    17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 34 ரன்களை விளாசினார். விமல்குமார் 30 பந்தில் 65 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். பாபா இந்திரஜித் 41 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

    • டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 202 ரன்கள் எடுத்துள்ளது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.

    திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.

    பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. துஷார் ரஹேஜா 28 ரன்னில் ரன் அவுட்டானார். அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.

    சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன.
    • குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரரின் லீக் சுற்று ஆட்டங்கள் சமீபத்தில் முடிவடைந்தன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    லீக் சுற்றுகள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

    • அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
    • எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி மற்றும் நத்தத்தில் தி.மு.க. சார்பில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் மின் கோட்ட அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் நானும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டோம். இந்த விழாவில் கலந்து கொண்டு வந்தபிறகு, அ.தி.மு.க.வினர் வெளியிட்ட அறிக்கையை பார்த்த பிறகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்ட சம்பவமே எனக்கு தெரியவந்தது. இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தி.மு.க. என்றுமே செய்யாது. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப்பைகளில் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் அந்த படங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அவர்களது படங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பள்ளி மாணவர்களுக்கு அந்த பைகளை கொடுங்கள் என்றார். இதனால் அவர் வழியில் வந்த நாங்கள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம். எல்லோரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள். அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.

    தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளை மட்டும் பார்க்கக்கூடாது. 234 தொகுதிகளும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இதனால் நாங்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் நத்தத்தில் இன்று அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் தனது தொகுதிக்கு அரசு கல்லூரியை கொண்டு வர முடியாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

    ×