என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை
    X

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை

    • கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×