என் மலர்
நீங்கள் தேடியது "கனரக வாகனங்கள் தடை"
- கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக, கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் 24 மணி நேரமும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. இந்த பாதையில் கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப் பாதையாகும். மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் இதில் உள்ளன.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்று வருவதால் இந்த வழியில் அடிக்கடி சாலை பழுதாகும். அதை அடுத்து இந்தச் சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கும் அதிகமான அளவு இந்தப் பகுதிகளில் பெய்து வருவதால் கல்லடா தென்மலை 13 கண் பாலம் அருகே சாலையில் விரிசல் உருவாகி அருகிலுள்ள கல்லடா ஆற்றில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் கனரக வாகனங்கள் 10 டன்னுக்கு அதிகமான அளவு கொண்ட பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பாதை சரி செய்யும் வரை தடை செய்ய உத்தரவிட்டது. தற்போது இந்த விரிசல் அதிகமாகியிருப்பதால் சிறிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சாலையில் நிலைமை குறித்து தமிழக கேரள எல்லையான புளியரையிலுள்ள போக்குவரத்து சோதனைச் சாவடி, காவல்துறை சோதனைச் சாவடிகளுக்கும் தகவல்களை தெரிவிக்கப்பட்டது.
புளியரை காவல்துறை மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடியில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 10 டன்னுக்கு அதிக பாரம் கொண்ட அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனிடையே கொல்லம் ரெயில்பாதையில் தண்டவாளத்தில் கிடந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதையை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.






