என் மலர்
நீங்கள் தேடியது "மின்தட்டுப்பாடு"
- வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது.
- குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிபுதூர், ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(21-ந் தேதி) நடைபெற இருப்பதால் அய்யர் மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி,
மினுக்கம்பட்டி, வி. புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிபுதூர், ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேடசந்தூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
சுல்தான்பேட்டை:
சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலப்பநாயக்கன் பாளையம், மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூராண்டாம் பாளையம், அக்கநாயக்கன் பாளையம், சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.
- நோக்கியா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் கோட்டம், நோக்கியா துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (25-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரோஜினி நகர், ராஜீவ் காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், பி.வி.எல்.நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம்,
ஆதிகேசவ பெருமாள் நகர், செக்கடி, டி.எம்.ஏ.ரோடு, தாலுக்கா ஆபீஸ் சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், காசா கிராண்ட், வி.ஆர்.பி. சத்திரம், போந்தூர் தேரேசாபுரம், பிள்ளைப் பாக்கம் கிராமம், குண்டுபேரம்பேடு, தத்தனூர், வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை ஸ்ரீபெரும்புதூர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
- துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:
துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி துவாக்குடி பகுதியில் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ,பி,இ,ஆர், & பி.ஹச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி,
பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மன்னார்புரம் செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.
- நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
நத்தம்:
நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (23-ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.
- செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
திணடுக்கல்:
செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (20ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் ராஜக்காபட்டி புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் இருப்பு இல்லாததால் அடிக்கடி உற்பத்தி பாதிக்கிறது. தற்போது 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கைவசம் இருக்கிறது. இதனால் மின் உற்பத்தி சீராக இருப்பதில்லை.

இதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது வரும் கோடை காலத்தில் 1391 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது.
இதற்காக 1500 மெகா வாட் மின்சாரத்தை வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடும் பணி நடைபெறும்.
கொள்முதல் செய்யப்பட உள்ள மின்சாரம், அதற்கான விலை நிர்ணயம் குறித்து நிதி கமிட்டியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கோடைகால பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை 5 ரூபாய் 29 காசு என்ற முறையில் 1500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பற்றாக்குறை சமயங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான்.
ஏற்கனவே 2016-2017ம் ஆண்டில் 650 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்திருந்தோம். 2017-2018ம் ஆண்டில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வருகிற கோடை காலத்திலும் அதிக மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் என கருதுவதால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடம்பாறை நீர்மின் உற்பத்தி திட்டத்தில் கிடைத்து வந்த 400 மெகாவாட் மின்சாரம் இப்போது கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களால் இது மூடப்பட உள்ளது. இதனால் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருந்து இங்கிருந்து மின்சாரம் வராது.
பாரத் உத்கல் மின் உற்பத்தி ஒப்பந்தப்படி 500 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். ஆனால் அங்கிருந்தும் மின்சாரம் கிடைக்கவில்லை. எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம் இன்னும் முழுமை பெறாததால் அங்கிருந்தும் போதிய மின்சாரம் வரவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சீரான மின்வினியோகம் இல்லாததால் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2500 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டியதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Summer #ElectricPower






