என் மலர்
கடலூர்
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது.
- அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டி பகுதிகளில் மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பண்ருட்டி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் வா லிபர் ஒருவர் மதுபானங்களை விற்பனை செய்து வந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.
- செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.
- 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். எனவே, கடலூர் மாவட்டத்தில் அரசு சாரா, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 18 வயது வரையுள்ள மாணவ மாணவியருக்கான விடுதிகளானது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.
அவ்வாறு உரிமம் பெற்றிடாமல் விடுதிகள் இயக்கி வரும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களில் தற்காலிகமாக தங்கி பயில்வதற்கும் விடுதி உரிமம் பெறுவது கட்டாயமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது.
- பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு தடம் எண்.1-ல் அரசுப் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சினை சாத்தநத்தம் வரை நீட்டித்து அமைச்சர் சி .வெ.கணேசன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று காலை சாலையில் திரண்டனர்.. அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். கோடங்குடியில் இருந்து பஸ் இயக்கப்படும் போது, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக இருந்தது.
தற்போது இந்த வழித்தடத்தை நீட்டித்து சாத்தநத்தம் கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது. அதனால் தங்கள் கிராமத்தில் இருந்து இயக்கிய வழித்தடத்தை நீட்டிப்பு செய்யாமல் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர். இதனை அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் போக்குவரத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது தொடர்பாக ஆலோசி த்து நடவடிக்கை எடுக்க ப்படுமென பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- 142 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றுவதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை படத்தில் காணலாம்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 142 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றுவதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை படத்தில் காணலாம்.
- அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது.
- மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு போலி டாக்டர் மருத்துவம் பார்த்து வருவதாக விருத்தாசலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சாமிநாதன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள சங்கர் (வயது52) என்பவரிடம் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சில வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.
- ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.
கடலூர்:
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 20 நாட்களாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த ஜிவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும்போது, போராட்டத்தை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி தீர்ப்பு வரஉள்ளது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.
பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.
அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.
- கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர்.
- பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூர்:
தேச பிரிவினையின் சோக வரலாற்று நினைவு தின பேரணி நடத்த பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர். மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேரணி செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், பேரணியில் தேசிய கொடி ஏந்தி செல்லக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அப்போது பா.ஜ.க. நிர்வாகிகள் நாங்கள் பேரணியாக செல்வதற்கு ஏன் அனுமதி அளிக்க மாட்டீர்கள்? அதற்கு மாறாக பல்வேறு கட்சிக்கு அனுமதி வழங்கி கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பேரணியாக செல்ல வேண்டுமானால் முறைப்படி அனுமதி பெற்று செல்ல வேண்டுமென போலீசார் தெரிவித்தனர். தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது. அதற்கு மாறாக நீங்கள் கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடலூர்:
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 20 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
- 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.
- 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், சின்னதுரை. இவர்களிடம் ஆளக்கொரு பசுமாடு உள்ளது. இதேபோல தெம்மூர் கிராமத்தை சேர்ந்த சரவணனிடம் காளை மாடு உள்ளது. இந்த 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. நீண்ட நேரமாகியும் மாடுகள் திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தேடினார்கள். அப்போது வயல்வெளி பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்தது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்்ளனர்.
- ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- கொலையை மறைக்க பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்தது அம்பலம்
பண்ருட்டி, ஆக.14-
பண்ருட்டி அருகே தந்தையை மகனே கட்டையால் அடித்து கொன்றுவிட்டு பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்து நாடகமாடியது தெரியவந்தது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (வயது 69). இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன்,மகாலிங்கம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். புருஷோத்தமன் தனது மனைவியுடன் ராமு வீட்டில் வசித்து வருகிறார். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். பிரபாகரன், மகாலிங்கம், அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையிலான போலீசார் கொலையாலிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவி கணவர் அ.தி.மு.கவில் உள்ளார். ராமு இறந்து கிடந்த போது அவரது உடலின் மீது அ.தி.மு.க கட்சியின் துண்டு கிடந்ததின் அடிப்படையிலும், கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவியின் வீட்டிற்கு சென்றதால் முதற்கட்ட விசாரணையாக பஞ்சாயத்து தலைவியின் கணவரை விசாரிக்க முடிவு செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர் யார் யாருடன் பேசி வந்தார் என அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர்.பின்னர் கொலையான ராமுவிற்கும் இவருக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் பஞ்சாயத்து தலைவி கணவரிடம் கேட்ட நிலையில் கொலைக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது.
அடுத்தகட்டமாக போலீசார் ராமுவின் மகன்கள், மருமகள்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ராமு மகன்கள், மருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் புருஷோத்தமன் தனது தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் போலீசாரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கும் எனது தந்தை ராமுவிற்கும் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்தது. இந்த பிரச்சினை காரணமாக ஆத்திரத்தில் இருந்த நான் சம்பவத்தன்று வீட்டின் முன் படுத்து தூங்கி கொண்டிருந்த எனது தந்தையை வாயை துணியால் அமுக்கி கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் போட்டுவிட்டேன். இந்த கொலையில் என் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் எனது தந்தை உடலின் மீது அ.தி.மு.க கட்சி துண்டை போட்டுவிட்டு பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு போய்விட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். நான் நினைத்தபடி போலீஸ் மோப்ப நாய் எனது தந்தை இறந்து கிடந்த இடத்தில் இருந்து பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு சென்றது. மேலும் நான் செய்த இந்த நாடகத்தால் அவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இந்த கொலையிலிருந்து நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டனர் இவ்வாறு அவர் கூறினார். தந்தையை மகனே கொலை செய்து விட்டு பழியை பஞ்சாயத்து தலைவி கணவர் மீது போடுவதற்கு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
கடலூர்:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் மாணவன் சின்னத்துரை, சக மாணவர்களால் வெட்டப் பட்டும், அதனை தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருங்கிணைப்பில், பல்வேறு கட்சிகள் சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மனிதநேய வணிகர் சங்கம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
- காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
- மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி,திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு பவித்ர உற்சவம் கடந்த 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் 2-ம் நாள் உற்சவமும் நேற்று 3-ம் நாள் உற்சவமும் நடந்தது. இதனை முன்னிட்டு காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






