search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில்  ஓதுவாமூர்த்திகள் சேர்ந்திசையில் திருமுறைபாராயணம் நிகழ்ச்சி
    X

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் அப்பரின் கயிலை காட்சி நிகழ்வை முன்னிட்டு ஓதுவா மூர்த்திகளின் சேர்ந்திசை திருமுறைபாராயணம் நடந்தது.

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் ஓதுவாமூர்த்திகள் சேர்ந்திசையில் திருமுறைபாராயணம் நிகழ்ச்சி

    • ஆடி அமாவாசை தினமான அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவிலாகும். இந்த கோவிலில் சமய குறவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் தடுத்தாட்கொண்ட தலமாகும். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த தலத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று அப்பருக்கு கயிலை காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள தலை சிறந்த ஓதுவாமூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சேர்ந்திசையில் திருமுறை பாராயணம் நிகழ்த்தி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஓதுவா மூர்த்திகளை மேளதாளம், நாதஸ்வரம், கைலாய வாத்தியம் முழங்க இந்து ஆன்மீக பேரவை மற்றும் சிவனடியார்கள் கூட்டத்தினர் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுக ளை கோவில் நிர்வாகத்தினர், ஒதுவாமூர்த்தி கள் நல சங்கத்தினர், இந்து ஆன்மீக அறக்கட்டளையினர் மற்றும் ஆலய ஓதுவா மூர்த்தி ராஜ்குமார் சிவனடியார்கள், சிவதொண்ட ர்கள் செய்தனர்.

    Next Story
    ×