search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kathikuthu"

    • விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர்.
    • கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது.

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 29- ல் ஓட்டல் நடத்தி வருபவர் கண்ணன். இவரது ஓட்ட லுக்கு காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்பொழுது கடை உரி மையாளர் ஏற்கனவே வாங்கிய பிரியாணிக்கு பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது ஓட்டல் உரிமையாளருக்கும் விக்கி மற்றும் எழில் ஆகியோருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதனை யடுத்து எழில் கத்தியுடன் வந்து ஓட்டல் கடை உரிமையாளரான கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர்.

    அப்போது அங்கு வந்த கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது. இதனால் இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்தசி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைர லாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
    • பெருமாளை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45)இவர் பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி. இந்நிலையில் பெருமாள் இவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திண்டிவனம் தலவாதி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். 

    அப்போது பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாளின் நண்பர்கள் 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெருமாளை சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார்.பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த ஓட்டலில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ரோசணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ரோசணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாளை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இவரது நண்பர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி காரணமாக இவரை கத்தியால் குத்தினார்களா ? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திண்டிவனம் முருகப்பாக்கத்தை சேர்ந்த அன்புராஜன், சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் ஆகியோரை ரோசனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • காயமடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை

    கோவை இருகூர் டி.எஸ்.கே நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை தன்னுடன் வேலை பார்க்கும் பிரபு(28) என்பவருடன் ஒண்டிப்புதூர் மேம்பாலம் கீழே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு மது வாங்கி அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்டிட தொழிலாளி பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பர் பிரபுவை குத்தினார். இதில் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதனால் பயந்து போன கட்டிட தொழிலாளி பிரபு அங்கிருந்து ஓடினார். அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த பிரபுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு வாலிபருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×